இது லிஸ்ட்லயே இல்லையே! செங்கோட்டையன் கையில் ப்ளான் - B! அவர் கூடவா கூட்டணி? எடப்பாடிக்கு ஷாக்!
சென்னை: சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் வரிசையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த முன்னாள் தலைவர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன். கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காத பழனிச்சாமி அவரது அடிப்படை உறுப்பினர் பதவியை படித்திருக்கிறார். இந்த நிலையில் செங்கோட்டையனின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் புதிய அரசியல் வரவான தமிழக வெற்றிக் கழகத்துடன் புதிய கூட்டணி அமையலாம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
எம்ஜிஆரால் வெறும் 25 வயதில் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு, எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டவர் ஈரோட்டை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன். அதிமுக வரலாற்றில் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்கிற பெருமை அவருக்கு உண்டு.
தற்போதைய சூழலில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் மிக மூத்த சீனியர் என்றால் அவர் தான். செங்கோட்டையனை அறியாதவர்களே அதிமுகவில் இல்லை என்று கூட சொல்லலாம். எம்ஜிஆரின் காலத்திலிருந்து ஜெயலலிதா காலம் வரை நிழல்போல் அதிமுகவில் இணைந்திருந்தவர்.

அதிமுக மோதல்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போதைய சூழ்நிலையில், தமக்குக் கிடைத்த முதல்வர் வாய்ப்பை விட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்து, அவரை உயர்த்தியவர்களில் முக்கியமானவர் செங்கோட்டையன். அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்ற தனது ஆசையை அடக்கிக் கொண்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியவர். ஆனால், கடந்த ஒரு வருடமாக செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்தார். சில நிகழ்வுகளில் அது தெளிவாக வெளிப்பட்டது.
செங்கோட்டையன் நீக்கம்
முத்தாய்ப்பாக 2026ல் அதிமுக வெற்றிபெற வேண்டுமெனில் பிரிந்துபோன தலைவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு, குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடனான பிரிவை சரிசெய்ய வேண்டுமென அவர் முயற்சி செய்தார். இதற்காக எடப்பாடியிடம் பலமுறை வலியுறுத்தினார், ஆனால் அந்த முயற்சிகள் பயனளிக்காமல் போனது. கெடு விதித்தும் அவரது பதவி பறிபோனது.
ஓபிஎஸ் டிடிவி கூட்டணி
இதனிடையே, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்வில், ஓபிஎஸும் டிடிவி தினகரன் உடன் ஒரே நிகழ்வில் செங்கோட்டையன் தோன்றியது அதிமுக அரசியலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான்" என்று அப்போது செங்கோட்டையன் கூறியதால், சூழ்நிலை இன்னும் சூடுபிடித்தது. அதன் விளைவாக, எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்தே நீக்கினார். முன்னதாக அவர் மீது பொறுப்புகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
பழனிசாமி மோதல்
ஓபிஎஸ், டிடிவியையும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் அதிமுகவில் இடமில்லை என்பது தான் எடப்பாடி கொடுத்திருக்கும் மெசேஜ். இதற்கிடையே நான் கட்சிக்கு செய்த தியாகத்துக்குப் பிறகும், குறைந்தது ஒரு நோட்டீஸ் கூட அளிக்கவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் கண்கலங்கியுள்ளேன்" என்று அவர் பேசியது, அவரது ஆதரவு நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், செங்கோட்டையனின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விஜய் கட்சி அரசியல்
"அதிமுகவை மீண்டும் ஒன்றுபடுத்தும் பணியை செங்கோட்டையன் முன்னை விட வேகமாக முன்னெடுப்பார்கள். மாவட்ட அளவில் ஆதரவு திரட்டி வருகிறோம். பல முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் இன்னும் அவரது தொடர்பில் உள்ளனர். அதிமுக - பாஜக கூட்டணி குறித்து குழப்பம் நிலவுகின்ற நிலையில், செங்கோட்டையன் - ஓபிஎஸ் - டிடிவி தினகரன் மூவரும் புதிய கூட்டணி உருவாக்கும் சாத்தியங்களும் அதிகமாக உள்ளது. குறிப்பாக தவெகவும் அதில் இணையும் வாய்ப்பு உண்டு" என்றனர்.
-
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு












Click it and Unblock the Notifications