கொங்கு மண்டலத்தில் கொண்டாட்டம் இப்பவே ஸ்டார்ட் போல! செங்கோட்டையனுக்கு விஜயின் தவெகவில் செம போஸ்டிங்?
சென்னை: செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போகிறார் என்று கடந்த 2 நாட்களாகவே இணையதளம் முழுவதும் தகவல்கள் பரவி வருகின்றன... அப்படியானால் தன்னுடைய எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்ய போகிறாரா? எப்போது செய்ய போகிறார்? விஜய் கட்சியில் இணைந்தால் செங்கோட்டையனுக்கு தவெகவில் என்ன பதவி வழங்கப்படும்? என்பது குறித்த தகவல்களும் கசிந்து வருகின்றன.
கட்சியின் ஒருங்கிணைப்புக்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.. இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், மதுரையில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்வின்போது, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸை சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஒரே காரில் சென்று, ஒன்றாகவே செய்தியாளர்களையும் சந்தித்து பேசி அதிமுகவுக்கு ஷாக் தந்தனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சியில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2000 பேரை நீக்கி உத்தரவிட்டார். கட்சியிலிருந்து நீக்கிவிட்டதால், செங்கோட்டையன் இனி அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில்தான், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாக துவங்கின.
செங்கோட்டையன் தவெக
ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் செங்கோட்டையன் பேச்சு நடத்தியதாகவும், நாளைய தினமே விஜய்யை நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வமாக தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைவார் என்றும் அடுத்த செய்திகள் பரவ துவங்கின. இதனால் தமிழக அரசியல் களமே பரபரத்து காணப்படுகிறது.
வரும் 30ம் தேதி செங்கோட்டையனின் சொந்தத் தொகுதி யான கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.. எனவே அதற்கு முன்பாகவே தன்னுடைய முடிவை செங்கோட்டையன் அறிவிக்கக்கூடும் என்கிறார்கள்.
இன்று கட்சி பதவி ராஜினாமா
எனினும், இதுகுறித்து செய்தியாளர்கள் செங்கோட்டையனிடமே நேற்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தனர்.. நீங்கள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு எந்த பதிலையும் செங்கோட்டையன் சொல்லவில்லை.. அதேசமயம், அந்த செய்தியை அவர் மறுக்கவும் இல்லை. \
இந்நிலையில், கோவையில் இருந்து செங்கோட்டையன் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை வந்துள்ள செங்கோட்டையன் இன்று அதாவது 26ம் தேதி தன்னுடைய எம்எல்ஏ பதவியை பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், இதைத்தொடர்ந்து விஜயை நாளை அல்லது நாளை மறுதினம் சந்தித்து அவர் முன்னிலையில், தவெகவில் இணைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
செங்கோட்டையனுக்கு தவெகவில் என்ன பதவி
ஒருவேளை தவெகவில் செங்கோட்டையன் இணைந்தால், அவருக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது... அதுமட்டுமல்ல, விஜய் அமைத்திருக்கும் 28 பேர் கொண்ட நிர்வாக குழுவும் செங்கோட்டையன் பொறுப்பில் ஒப்படைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவில் நீண்ட காலம் பணியாற்றியவர் செங்கோட்டையன்.. ஒருவேளை தவெகவில் அவர் இணையும் பட்சத்தில் தற்போது அனுபவம் இல்லாத நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வைத்துள்ள தவெகவுக்கு செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் உடனிருப்பது, அக்கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தவெகவுக்கு கொங்கு மண்டலத்தின் செல்வாக்கு பெருமளவில் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?










Click it and Unblock the Notifications