29 தொகுதிகள்.. செங்கோட்டையன் கை காட்டுபவரே வேட்பாளர்.. தவெகவில் புஷ்ஷான புஸ்ஸி ஆனந்த்!
சென்னை: தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனின் கை, அக்கட்சியில் ஓங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. தவெக சார்பில் எடுக்கப்பட்ட மேற்கு மண்டல புள்ளி விபரங்கள், நிர்வாகிகளின் பட்டியல் செங்கோட்டையன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 4 மாவட்டங்களில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் செங்கோட்டையனிடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு மேற்கு மண்டல பொறுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு கூடுதலாக சில பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வழக்கமான அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடப்பது வழக்கம். ஆனால் நேற்றைய கூட்டம் செங்கோட்டையன் தலைமையிலும், ஆதவ் அர்ஜுனா முன்னிலையிலும் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடந்துள்ளன.
இதன்பின் செங்கோட்டையனிடம் தவெக சார்பாக மேற்கு மண்டலத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மேற்கு மண்டலத்தில் உள்ள 4 மாவட்டங்களின் தவெக நிர்வாகிகளின் பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 4 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 4 மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளுக்கான பொறுப்பும் அளிக்கப்பட்டதாக அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகின்றனர். அதாவது 29 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பொறுப்பை செங்கோட்டையன் வசம் விஜய் கொடுத்துவிட்டார். அதற்கேற்ப மேற்கு மண்டலத்தில் தவெகவை வளர்ப்பதற்கான பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் செங்கோட்டையன் உறுதி கொடுத்துள்ளார்.
அதேபோல் ஜனவரி மாதத்திற்குள் மேற்கு மாவட்டங்களில் அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளை தவெகவில் இணைப்பது தன்னுடைய பொறுப்பு என்றும், மாவட்டச் செயலாளர்கள் என்ன பிரச்சனை என்றாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் செங்கோட்டையன் கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் திமுக, அதிமுக கட்சிகளுடன் தொடர்பில் உள்ள நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
தவெகவில் பணம் வாங்கிவிட்டு பதவி கொடுத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கூட்டணி அமைந்துவிடும் என்ற நம்பிக்கையில் சிலர் மற்ற கட்சி நிர்வாகிகளுடன் இணைந்திருப்பதாக சில புள்ளி விவரங்களை வைத்தும் அவர்களுக்கும் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications