தவெகவில் செங்கோட்டையன்.. கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு சிக்கல்.. உச்சத்திற்கு செல்லும் திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளியும், மூத்த அரசியல் தலைவருமான செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது மறைமுகமாக திமுகவுக்கு சாதகமாகவும், அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் மாறி இருக்கிறது. இதுதொடர்பாக இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2021 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 68 சட்டசபைத் தொகுதிகளில் 44 தொகுதிகளை அதிமுக கூட்டணியும், 24 தொகுதிகளை திமுக கூட்டணியும் கைப்பற்றியது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

Sengottaiyan Joins TVK

இதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று திமுக தலைமை தீவிரமாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ப செந்தில் பாலாஜியும் பம்பரமான சுழன்று பணியாற்றி வருகிறார். ஆனாலும் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருப்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலின் போதே அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தனித்து நின்று கணிசமான வாக்குகளை கொங்கு மாவட்டங்களில் பெற்றிருந்தன. இதன் காரணமாகவே திமுகவால் எளிதாக வெல்ல முடிந்தது. ஆனால் இம்முறை கூட்டணி அமைத்திருப்பதல், திமுக எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்துள்ளார். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி என்பதோடு, சமூக ரீதியிலாகவும் செங்கோட்டையனுக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. இதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தவெகவை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் செங்கோட்டையனுக்கு களத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்ற அனுபவம் அதிகமாக இருப்பதால், அதிமுகவின் வாக்குகளில் சேதாரம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. குறைந்தபட்சம் ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனால் அதிமுகவுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்க முடியும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இதனால் திமுக எதிர்ப்பு வாக்குகள் மற்றும் அதிமுக ஆதரவு மனநிலையில் உள்ள வாக்குகளை தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனால் பிரிக்க முடியும். அதேபோல் தவெகவின் கொங்கு மண்டல முகமாக செங்கோட்டையன் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதால், அதிமுக மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளும் தவெக நோக்கி வருவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இது களத்தில் திமுகவுக்கு சாதகமாக மாறலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+