Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.. விஜய் தந்த "போஸ்டிங்" சர்ப்ரைஸ்! பனையூரில் ஸ்வீட் எடு கொண்டாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று இணைந்தார்.. நேற்றைய தினம் அக்கட்சி தலைவர் விஜயை, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையன் சந்தித்து, 2 மணி விஜய்யுடன் பேச்சு நடத்திய நிலையில் இன்று தவெகவில் இணைந்தார்.. காலை 10 மணிக்கு தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடந்துள்ளது. கட்சியில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி தர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

Sengottaiyan tvk vijay

இதே கோரிக்கையை வலியுறுத்திய மூத்த தலைவர் செங்கோட்டையன், மதுரையில் நடந்த தேவர் குரு பூஜை நிகழ்வின்போது, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸை சந்தித்து பேசியதும், அவர்களுடன் ஒரே காரில் சென்று, கூட்டாகவே செய்தியாளர்களை சந்தித்ததும் மிகப்பெரிய பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி விட்டது.

விஜய் கட்சியில் செங்கோட்டையன்

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சியில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2000 பேரை நீக்கி உத்தரவிட்டார். கட்சியிலிருந்து நீக்கிவிட்டதால், செங்கோட்டையன் இனி அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில்தான், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாக துவங்கின.

ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் செங்கோட்டையன் பேச்சு நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில்தான், நேற்றைய தினம் செங்கோட்டையன் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தலைமை செயலகத்துக்கு சென்று தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததுமே, செங்கோட்டையன் தவெகவில் இணைவது உறுதியாகிவிட்டது.

Sengottaiyan tvk vijay

இன்று தவெகவில் இணைகிறார்

வரும் 30ம் தேதி செங்கோட்டையனின் சொந்தத் தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்துவதால், அதற்கு முன்பாகவே தன்னுடைய முடிவை செங்கோட்டையன் அறிவித்து, தவெகவில் இணைவார் என்று செய்திகள் கசிந்தன.

ஆனால், சென்னையில் தங்கியிருக்கும் செங்கோட்டையன், இன்றைய தினமே தவெகவில் இணைவார் என்றார்கள்.. இதையடுத்து, நேற்று மாலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

பனையூர் ஆபீஸ்

அதன்பிறகு, ஆதவ் அர்ஜுனா காரில் இருவரும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு சென்றனர். அங்கு விஜயுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

Sengottaiyan tvk vijay

இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் இன்று செங்கோட்டையன் இணையும் விழா நடைபெற்றது.

இன்று காலை 10:00 மணிக்கு, கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், செங்கோட்டையன் கலந்து கொண்டு, த.வெ.க.,வில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.

விஜயை சந்தித்தபோது, தன்னுடன் தவெகவில் இணையவுள்ள அதிமுக நிர்வாகிகள் பட்டியலையும், விஜயிடம் ஒப்படைத்திருந்தார். அவர்களுக்கும் விரைவில் பதவி வழங்குவதாக விஜய் உறுதியளித்தாராம்.

மூத்த தலைவர்கள்

அந்தவகையில், அதிமுகவை சேர்ந்த கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் அமைச்சர், மதுரை மாவட்ட முன்னாள் அமைச்சர், ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர் என பிரபலங்கள் சிலர், தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் ராமநாதபுரம் முன்னாள் மாவட்டச் செயலர் ஒருவர் ஆகியோரையும் தவெகவில் சேர்க்க பேச்சு நடத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி சுவாமிநாதன், காரைக்கால் ஹஸனாவும் தவெகவில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.

செங்கோட்டையன் போஸ்டிங்

கட்சியில் சேரும் செங்கோட்டையனுக்கு தவெகவில் செங்கோட்டையனுக்கு அமைப்பு செயலாளர், அவைத் தலைவர், தலைவர், முதன்மை பொதுச்செயலர் ஆகிய பதவிகளில் ஏதாவது ஒன்றை வழங்க, விஜய் முடிவு செய்துள்ளார். ஆனால், பொதுச்செயலர் என்ற அடையாளம் வரும் பதவி வேண்டாம் என, செங்கோட்டையன் கூறியதாக தெரிகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு தந்து விஜய் இன்ப அதிர்ச்சியை தரப்போவதாக சொன்னார்கள்.

Sengottaiyan tvk vijay

.
விஜய் அமைத்திருக்கும் 28 பேர் கொண்ட நிர்வாக குழுவும் செங்கோட்டையன் வசம் ஒப்படைக்க விஜய் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கட்சியில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி தர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரசாரப் பயணத்தை வகுத்து தந்த அனுபவம் கொண்டவர் செங்கோட்டையன்.. மேலும், கொங்கு மண்டல களத்தில் அவரது செயல்பாடு எப்போதும் கட்சி தலைமைக்கு திருப்தியை மட்டுமே தந்து வந்திருக்கிறது... அந்தவகையில், செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் விஜயுடன் இருந்தால், அது தவெகவுக்கு பலம் சேர்ப்பதுடன், கொங்கு மண்டலத்தின் தவெக வாக்கு வங்கியையும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+