தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு
சென்னை: விஜய் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக வெற்றி கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் தீயாய் வேலை செய்து வருகிறார்கள். தொகுதி பங்கீட்டை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி முடித்துள்ள நிலையில் வேட்பாளர்களை உறுதி செய்யவும், பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தவும் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த சீமான் பிரசாரத்தை தொடங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதேபோன்று விசிக, காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் தனித்து விடப்பட்டிருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது. கிட்டத்தட்ட வேட்பாளர்களை உறுதி செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் விஜய் தமிழகம் முழுக்க சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தவெக நிர்வாகிகள் கூறி வந்த நிலையில் இன்னமும் விஜய் பிரசாரத்தை தொடங்கவில்லை என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் விஜய் வரும் 28 ஆம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தான் போட்டியிட உள்ள பெரம்பூரில் இருந்து பிரசாரத்தை விஜய் தொடங்க இருக்கிறாராம்.
இந்த நிலையில் தான், விஜய் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக வெற்றி கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து என்ன கோரிக்கை வைத்தீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், "விஜய்யின் பிரச்சாரத்திற்காக சந்தித்தோம்.. தேர்தலை பொறுத்தவரைக்கும் என்ன மாதிரியான ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் இருக்கு. என்ன மாதிரியாக விதிகள் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து கேட்டோம்" என்று கூறினார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்?












Click it and Unblock the Notifications