எடப்பாடி பழனிசாமியே temporary பொதுச் செயலாளர்தான்! அவர் எப்படி என்னை நீக்க முடியும்? செங்கோட்டையன்
சென்னை: தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 53 ஆண்டுகள் கட்சியில் இருந்த என்னை விதியின் கீழ் நீக்கவில்லை. எந்த அடிப்படையில் நீக்கியிருக்கிறார், விரைவில் வழக்கு தொடர்வேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியின் போது டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அதிமுக ஒன்றிணைவு குறித்து அவர் பேசியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையன் பேசியதை சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிவிட்டார் என கூறி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கினார்.
இதுகுறித்து செங்கோட்டையனின் கருத்துகளை கேட்க செய்தியாளர்கள் முற்பட்ட போது இன்று தனது இல்லத்தில் வைத்து விளக்கம் அளிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று குள்ளம்பாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் சசிகலாவிடம் இருந்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை எப்படி பெற்றார் என்பதை நாடறியும். எடப்பாடி பழனிசாமி அதிமுக வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன்.
கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அதிமுகவில் நான் தொடர விரும்புகிறேன். 2026 இல் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்ததற்காக என்னை அதிமுகவில் இருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது. நான் கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்.
துரோகத்திற்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனில் அதனை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும். அதிமுகவை ஒருங்கிணைக்கவே தேவர் ஜெயந்தியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை சந்தித்தேன். இதற்கு கிடைத்த பரிசுதான் கட்சியில் இருந்து நீக்கம்.
தற்காலிக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி 53 ஆண்டுகள் காலம் கட்சியில் இருந்த என்னை நீக்கியது கேள்விக்குறியானது. விதியின் கீழ் என்னை நீக்கவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமை கழக அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற காரணத்தாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்சை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
திட்டமிட்டபடி நாளை ஜூன் 4ம் தேதி தமிழக பள்ளிகள் திறக்கப்படும்.. செங்கோட்டையன் முக்கிய தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications