செங்கோட்டையன் காதில் விஜய் பேசியது இதைதானா? இதோ 2 சிக்கல்! திருச்சி டூ பெரம்பூர்.. பதவிக்கு ஆபத்தா?
சென்னை: திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தாக்கல் செய்த அஃபிடவிட் எனப்படும் உறுதிமொழி ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்பு முரண்பாடுகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளதால் விஜய்க்கு சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.. இந்த வழக்கினால் விஜய் தனது முதல்வர் பதவியை இழக்க நேரிடலாம் என்றும், அப்போது புஸ்சி ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜுனா புதிய முதலமைச்சராக வரக்கூடும் என்றும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார் தாமோதரன் பிரகாஷ்.
News TIme TN சேனலில் பேசியிருக்கும் தாமோதரன் பிரகாஷ், "விஜய் குறித்து மக்களிடம் இருந்த பொதுவான பிம்பம் என்னவென்றால், அவர் எதற்கும் அசரமாட்டார், எதையுமே யோசிக்க மாட்டார், சட்டமன்றத்தில் பேசக்கூட மாட்டார், எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர், காமராஜர் போல அல்லாமல் வித்தியாசமாக உள்ளார் என்ற பெரிய பிம்பம் உள்ளது. ஆனால், அந்த பிம்பம் நேற்றைய தினம் உடைக்கப்பட்டு விட்டது.

விஜய் திடீரென சட்டமன்றதில், செங்கோட்டையன் பக்கத்தில் உட்கார்ந்து ஏதோ பேச ஆரம்பித்தார்.. தன்னுடைய சீட்டிலிருந்து எழுந்து சென்று செங்கோட்டியனிடம் அப்படி என்ன பேசினார்? என்று ஆராய்ந்தபோதுதான், அது சாதாரண விஷயம் கிடையாது என்பது தெரியவருகிறது.
எடுபடாத நிர்மல் குமார் வாதம்
விஜய் அரசுக்கு, கோர்ட்டில் எந்தவிதமான தீர்ப்பும் சாதகமாக வரவில்லை.. கரூர் வழக்குகூட, ஹைகோர்ட்டில் முடியவில்லை, சுப்ரீம்கோர்ட் சென்றுதான் ஸ்டே வாங்கியிருக்கிறார்கள்.. அதேபோல காவிரி வழக்கு, சாதாரண வழக்குகள், கட்சித் தாவல் தடைச் சட்டம் என எங்கு பார்த்தாலும் விஜய்க்குத் தோல்விகளே ஏற்பட்டுவிட்டன.. இதற்கு காரணம், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் சட்ட அறிவு அந்த அளவுக்குதான் உள்ளது.
சட்டவிரோத விஷயங்களைதான், சட்டசபையிலேயே பேசுகிறார் நிர்மல்குமார்.. அதனால் இவர்களுக்கென ஒரு லாபியே கிடைக்கவில்லை.. இத்தனைக்கும் விஜய் நாராயணன் உள்ளிட்ட வக்கீல்களாலும் உயர்நீதிமன்றத்தில் சரியான முறையில் வாதிட்டு கொண்டுவர முடியவில்லை.
சிக்கலை தரும் 2 வழக்குகள்
இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய்க்கு 2 கேஸ்கள் மாட்டிக்கொண்டுள்ளன.. திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் விஜய் தாக்கல் செய்த அபிடவிட்டுகள் 2 வெவ்வேறு விதமாக இருப்பதாகவும், அவற்றுக்கிடையே கோடிக்கணக்கான ரூபாய் சொத்து மதிப்பு வித்தியாசம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த முரண்பாடான அபிடவிட் விவகாரத்தை உயர்நீதிமன்றம் தீவிரமாக டேக்-ஆஃப் செய்ய தொடங்கியுள்ளது.
விஜய் பதவிக்கு ஆபத்து
அதேபோல குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் பெட்டிஷனும் உயர்நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது..
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணம் மிகவும் மோசமானதாகவும், பெரம்பூர் அபிடவிட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு வித்தியாசம் கொண்டதாகவும் உள்ளது. திருச்சி தேர்தல் பெட்டிஷனில் விஜய்க்கு தோல்வி ஏற்பட்டு, அதில் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.
அடுத்த முதல்வர் யார்
அப்படி விஜய் பதவியை இழக்க நேரிட்டால், புஸ்சி ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முதலமைச்சராக வரக்கூடும், இதனால் அரசாங்கமே முழுமையாக மாறக்கூடிய சூழல் உருவாகும்..
இப்படியான சூழல் இதுவரை வரவில்லை.. இதுபோன்ற இக்கட்டான நிலைகளும் ஆபத்துகளும் எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காகவே விஜய் சட்டமன்றத்தில் அமர்ந்து செங்கோட்டையனிடம் தீவிரமாக விவாதித்திருக்கிறார். அதேபோல ஆதவ் அர்ஜுனாவுடன் அவசரமாக ஆலோசித்திருக்கிறார்..
ஆக, விஜய் யாருக்கும் அஞ்ச மாட்டார், எப்போதும் பேச மாட்டார் என்ற பிம்பம் எல்லாமே உடைந்து விட்டது.. தன்னுடைய பதவிக்கு ஆபத்து வரப்போகிறது என்றால், விஜய் பேசுவார், அசைவார், ஆலோசனை செய்வார், விவாதிப்பார், அனைத்து வேலைகளையுமமே செய்வார் என்பது இதன் மூலம் நமக்கு தெளிவாகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
