செங்கோட்டையனுக்கு மரியாதை செலுத்திய விஜய்.. பதவியேற்பு விழாவில் வைரலான தருணம்!
சென்னை: விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில், மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்றுக் கொண்ட போது விஜய் மற்றும் ராகுல் காந்தி எழுந்து நின்று மரியாதை செலுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயின் இந்த செயலை அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் பாராட்டி வருகின்றன.
தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட முக்கிய தலைவர்களில் ஒருவராக கே.ஏ.செங்கோட்டையன் பார்க்கப்படுகிறார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அவர், பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து வந்துள்ளார். குறிப்பாக அதிமுக கட்சியின் முக்கிய முகமாக விளங்கிய செங்கோட்டையன் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்த அவர், கொங்கு மண்டலத்தில் தனித்துவமான ஆதரவுத்தளத்தை உருவாக்கியிருந்தார். கட்சியின் முக்கிய முடிவுகளில் செல்வாக்கு கொண்ட தலைவராகவும் அறியப்பட்டார். பின்னர் அரசியல் சூழ்நிலைகளின் மாற்றத்தால், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெகவில் இணைந்த பிறகு, கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட அவர், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சராக பதவியேற்றார். இந்த விழாவின் போது, விஜய் மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நின்றபடியே மரியாதை செலுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. நீண்ட அரசியல் அனுபவத்துடன் மீண்டும் ஆட்சியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள செங்கோட்டையனின் அரசியல் பயணம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
-
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி!









Click it and Unblock the Notifications