ஜாதகத்தை நம்பி முதல்வர் கனவில் 25 அதிமுக தலைகள்.. வைரலாகும் ஜெ. மாஜி உதவியாளர் பூங்குன்றன் தகவல்
சென்னை: அதிமுகவில் ஜாதகத்தை நம்பி 25 பேர் முதல்வர் கனவில் மிதக்கிறார்கள் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தமது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள தகவல் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பூங்குன்றன் பதிவிட்டுள்ளதாவது:
முதலமைச்சர் கனவு காணமுடியுமா? முடியும் என்கிறது இன்றைய வரலாறு. முதலமைச்சராக வேடம் ஏற்று நடிக்கமுடியுமே தவிர கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வரலாறு மறைந்து, இன்று நிறைய பேர் முதலமைச்சர் கனவை கண்டுகொண்டிருப்பது என் தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்படுத்திய வரலாறு.
சாதாரண தொண்டன்கூட இந்த பதவியை அலங்கரிக்க முடியும் என்று சொல்லி, செய்துகாட்டியவர் எங்கள் அம்மா. அதனால் தான் என்னவோ இன்று நிறையபேர் இந்த கனவில்.

கட்சி பற்றி கவலையே இல்லை
நான் சொல்வது உண்மை என்பது கனவு காண்பவர்களுக்கு புரியும். இரண்டாக பிரியும் போது குழம்பிய நான் இன்று கேள்விப்படுவதும், தெரிந்துகொண்டதையும் வைத்து பார்க்கும்போது, முதலமைச்சர் ஆசை அதிகமாகும்போது உள்ளடி வேலைகளும் அதிகமாகுமே என்று திகைத்து நிற்கிறேன். கலங்கி நிற்கிறேன். ஆக, யாருமே கட்சி நல்லாயிருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை,

ஜாதகத்தால் சிஎம் கனவு
தாம் நல்லாயிருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். முதலமைச்சர் ஆக உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டால், எங்களுக்கு என்ன தகுதியில்லை, யார் யாரோ ஆகும்போது நாங்கள் ஆகக்கூடாதா. ஜாதக கட்டம் எங்களுக்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லும் அவர்களின் பதிலை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.

25 பேரின் முதல்வர் கனவு
அடித்துச் சொல்கிறார்கள் நான் முதலமைச்சர் ஆவேன் என்று. கட்டம் தன் கடமையை செய்யும் அதில் மாற்று கருத்தில்லை! எல்லோருமே இப்படி சொல்வதை பார்த்து எனக்கு மயக்கம் வருகிறது. இதற்கு ஏன் மயக்கம் என்று நினைக்கிறீர்களா? முதலமைச்சர், பொதுச்செயலாளர் கனவில் இருப்பவர்களின் எண்ணிக்கை எனக்கு தெரிந்தே 25ஐ தாண்டுகிறது.

விரைவில் காட்சிகள் அரங்கேறும்?
இதில் சிரிப்பு என்னவென்றால் எல்லோரும் ஒன்றாக பயணித்தவர்கள், பயணிக்கப்போகிறவர்கள். காலம் கரைய கரைய காட்சிகள் அரங்கேறும். என்னுடைய வேண்டுதல் எல்லாம் இறைவா! இந்த தொண்டர்களை காப்பாற்று என்பதுதான். இவ்வாறு பூங்குன்றன் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications