பாஜக எச்.ராஜாவுக்கு என்னாச்சு? மருத்துவமனையில் திடீர் அட்மிட்! 'எக்ஸ்' பக்கத்தில் "அட்மின்" பதிவு!
சென்னை: தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா திடீர் உடல் நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் முகங்களில் ஒருவர் எச்.ராஜா. இந்துத்துவா கொள்கைகளை மிக தீவிரமாக பேசுபவர். அரசியல் அரங்கத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்களை தவிர பெரும்பாலானவர்களை 'ஒருமையில்' 'கடும் வார்த்தைகளில்' விமர்சிக்கக் கூடியவர். சர்ச்சைக்குரிய எக்ஸ் பதிவுகளை போட்டுவிட்டு பின்னர் 'அட்மின்' போட்டுவிட்டார் என கூறக் கூடியவர் எச்.ராஜா.

நீதிமன்ற படிகளில் எச்.ராஜா: இந்த போக்கின் உச்சமாக உயர்நீதிமன்றம் குறித்து எச்.ராஜா தெரிவித்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தந்தை பெரியார் சிலை உடைப்பு, அறநிலையத்துறை ஊழியர் குடும்ப பெண்கள் குறித்த விமர்சனம் உள்ளிட்டவை எச்.ராஜாவை நீதிமன்றத்தில் நிறுத்தியது. இதனால் தம் மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் இப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார் எச்.ராஜா. ஆனால் சென்னை உயர்நீதிமன்றமோ, எச்.ராஜாவை மிக கடுமையாக எச்சரித்துள்ளது.
தேர்தல்கள் தோல்வி: பாஜகவின் தேசிய செயலாளராக சில ஆண்டுகள் பதவி வகித்தார். தற்போது பாஜகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.வான எச்.ராஜா, சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் இடைவிடாமல் தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருக்கிறார். ஆனால் வெற்றிதான் கிடைக்கவில்லை. சாரணர் இயக்கம் தொடர்பான தேர்தலில் எச்.ராஜா அடைந்த பெருந்தோல்வி சமூக வலைதளங்களில் விமர்சனங்களில் முதன்மை இடம் பிடித்திருந்தது.

மருத்துவமனையில் திடீர் அட்மிட்: இந்த நிலையில் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எச்.ராஜாவின் உடல்நிலையில் என்ன பாதிப்பு? அப்பல்லோ மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கப்பட்டுள்ளார்? என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

"அட்மின்" பதிவு: ஆனால் எச்.ராஜாவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. "Team HR" என்ற பெயரிலான அப்பதிவில் "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.H. ராஜா அவர்கள் B.Com.,B.L.,FCA.,Ex.MLA., உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட இயலாது என தெரிவித்துக்கொள்கிறோம்" என பதிவிடப்பட்டுள்ளது. இப்பதிவில் பாஜகவினரும் எச்.ராஜாவின் ஆதரவாளர்களும், "விரைவில் உடல் நலம் பெற வேண்டும்" என பதிவிட்டு வருகின்றனர்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications