'நந்தவனத்தில் ஒரு ஆண்டி'.. கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பெயரை சொல்லி ஹெச்.ராஜா கூலாக கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுகவின் இந்த முடிவு குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கருத்து கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைமுகமாக பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கள் ஏற்கெனவே இருந்த சலசலப்புகளை பஞ்சாயத்துக்களாக வெடிக்கச் செய்தது. அதிமுகவின் தலைவர்கள் அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினர்.

Senior BJP leader H. Raja has said that there is no loss for AIADMK by withdrawing from the alliance

குறிப்பாக கடந்த 14ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் அண்ணாமலை மீதான விமர்சனங்கள் கூர்மையடைந்தன. ஏற்கெனவே அண்ணாமலை மீது பாஜக தலைமையிடம் அதிமுக ஏராளமான புகார்களை அளித்திருந்தது. இப்படி இருக்கையில், அண்ணா குறித்து அவர் பேசியதற்கு கூட பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. எனவேதான் அண்ணாமலை மீதான் விமர்சனங்கள் சூடுபிடித்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன.

இதனையடுத்து இது குறித்து இரு தினங்களுக்கு முன்னர் விரிவாக பேட்டியளித்த ஜெயக்குமார், "எங்களை பொறுத்த அளவில் கட்சியின் மறைந்த தலைவர்கள், மூத்த தலைவர்கள் குறித்த அவதூறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இது கட்சி முடிவு. கட்சி முடிவைதான் நான் அறிவிக்கிறேன்" என்று கூறினார்.

அதேபோல பாஜக மாநில தலைவரை மாற்றம் செய்தால் இந்த கூட்டணி இறுதியாகும்? நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, "மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சிப்பதை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை. இப்படியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடு கூட்டணி தேவையா? என்று தொண்டர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எனவே இந்த கூட்டணி தேவையில்லை என்பதுதான். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.

இருப்பினும், எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக எதையும் கூறாத நிலையில், ஜெயக்குமார் கூறுவதை பெரியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பாஜக நிர்வாகிகள் கூறி வந்தனர். இந்த சூழலில்தான் இன்று அவசரமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட செயலாளர்களும் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து 2 கோடிக்கும் அதிகமான தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "அதிமுக விலகியதில் எங்களுக்கு எந்த நஷ்மும் கிடையாது. நந்தவனத்தில் ஒரு ஆண்டி நாலுமாசமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தானடி ஒரு தொண்டி, அதை இபிஎஸ் போட்டுடைத்தாண்டி" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+