அதெப்படி அண்ணாமலையை அப்படி சொல்லலாம்? பொன்னாரை ஓரம்கட்டி விரலை நீட்டி சீறிப் பாய்ந்த எச்.ராஜா!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த செய்தியாளர் கேள்விக்கு கடும் அதிருப்தி அடைந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விரலை நீட்டி சீறிப் பாய்ந்தார்.
சென்னையில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார்.

மூத்த தலைவர்கள் அதிருப்தியா?: அப்போது அண்ணாமலை மீது மூத்த பாஜக தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆளுநர் ஆகி உள்ளார். அவருக்கு என்ன கருத்து உள்ளது என்று எனக்கு தெரியவில்லை, சி.பி.ராதகிருஷ்ணன் மூத்த தலைவர்..ஆளுநராக இருக்கிறார்.. அவருக்கு என்ன கருத்து இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. நான் மூத்த தலைவர் என நீங்கள் நினைக்கிறீர்களா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. நான் உங்கள் முன் பேசிக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

டீ குடிப்பது மாதிரியா?: பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியது பற்றிய கேள்விக்கு, பலவித கருத்துகளை பலரும் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இதை பற்றி ஊடகங்கள் முன் பேசுவது எந்த விதத்தில் சரி. கூட்டணி என்பது டீ குடிப்பது போல் பேசிவிட்டு போவது கிடையாது என நறுக்கென பதில் கொடுத்தார்.

அண்ணாமலைக்கு மரியாதை கொடுங்க..: இந்தக் கூட்டத்தில், கோவையில் செய்தியாளரிடம் அண்ணாமலை கோபப்பட்டது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், எங்க மாநிலத் தலைவருக்கும் நீங்க (பத்திரிகையாளர்கள்) மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், ஆலோசனைக் கூட்டத்தை கூட்டிய அண்ணாமலைக்கு பிரஸ் மீட்டுக்கு வரத் தெரியலையா? என்றார்.

சீறிய எச்.ராஜா: உடனே ஆவேசப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விரலை நீட்டியபடியே, இதனை என்னால் ஏற்க முடியாது. வரத் தெரியலையான்னு ஒரு மாநிலத் தலைவரை பற்றி பேசக் கூடாது. டெல்லியிலும் மீட்டிங் நடக்கும். எல்லா மீட்டிங் முடிந்த பின் ஆல் இண்டியா பிரசிடென்டா பிரஸ்ஸை பார்க்கிறார்? செய்தித் தொடர்பாளர்கள்தான் பார்க்கிறாங்க. அதனால ஒவ்வொரு கட்சிகும் ஒரு முறை இருக்கு. மாநிலத் தலைவர் பற்றி இந்த மாதிரியான ரிமார்க்ஸ் தான் அவருக்கு எதிரானதாக கிரியேட் ஆகுது. ஆகையால் தயவு பண்ணி இது மாதிரி வரத் தெரியலை என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீங்க என்றார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங் -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications