பேரறிஞர் அண்ணா- நடிகை பானுமதி குறித்த இழிவான வீடியோ- டெலீட் செய்த பாஜக பொருளாளர் எஸ்ஆர் சேகர்
சென்னை: பேரறிஞர் அண்ணா, நடிகை பானுமதி குறித்த இழிவான வீடியோ ஒன்றை தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது பரபரப்பை கிளப்பியது. இதனையடுத்து எஸ்.ஆர்.சேகர் தமது ட்வீட் பதிவையும் பகிர்ந்த வீடியோவையும் நீக்கிவிட்டார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணாவை கடுமையாக விமர்சித்தது பெரு சர்ச்சையானது. அண்ணா மீதான அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜூ, எஸ்பி வேலுமணி, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனாலேயே அண்ணா திமுக கூட்டணியில் பாஜக இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். ஆனாலும் பாஜக தலைவர்கள் அண்ணா திமுக- பாஜக கூட்டணி நீடிக்கிறது என கூறி வருகின்றனர். இன்னொரு பக்கமோ, அண்ணாமலையை விமர்சித்தால் கடும் பதிலடி தருவோம் என பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் வரிந்து கட்டி பதில் தந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தமது ட்விட்டர்- எக்ஸ் பக்கத்தில் "கேட்டதில் திகிலடைய வைத்தது தயாரிப்பு--யாரோ? என்ற தலைப்பில் ஒரு இழிவான வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில் பேரறிஞர் அண்ணா, நடிகை பானுமதியை தொடர்பு படுத்தும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் புகழ்மிக்க வாசகத்தை இழிவுபடுத்தியும் அண்ணா வழி நடப்போம் என்ற திமுகவினர் முழக்கத்துக்கு ஆபாசமான உள்நோக்கத்தை கற்பித்தும் வசனங்கள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் அப்பதிவையே நீக்கிவிட்டார்.
முன்னதாக அதிமுக நிர்வாகி ராஜ்சத்யன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: திராவிட இனத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் குறித்து தகாத/அருவருக்கதக்க பொய் செய்திகளை பரப்புவது முகம் தெரியாத , அறிவற்ற , அனுபவமற்ற, அரைவேக்காட்டுத்தனமான அரை கிறுக்கன் பேசியிருந்தால் பரவாயில்லை , பாஜக தமிழ்நாடு மாநில பொருளாளர் @SRSekharBJP பேசியிருக்கிறார்,

தமிழருக்கான நில பரப்பாக தமிழ்நாட்டை உருவாக்கி , தமிழர்களின் வாழ்வு செழிக்க தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து மறைந்த உத்தம தலைவரை, மக்கள் பணியென்றால் என்னவென்றே தெரியாத மக்காத குப்பை ஒருவர் அவமதிக்க முயன்றால் அவருக்கு தக்க மரியாதையை அவர் மன்னிப்பு கேட்கும் வரை இணையத்திலும் களத்திலும் தொடர்ந்து கொடுப்போம் சகோதர சகோதரிகளே!
இந்த பதிவை செய்தவர்களுக்கும், இயக்கியவர்களிடத்திலும்
#நன்றி_மீண்டும்வராதீர்கள் @BJP4TamilNadu தொண்டர்களின் முடிவை தனது முடிவாக ஏற்ற எங்கள் தலைமைக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள். இவாறு ராஜ்சத்யன் பதிவிட்டுள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications