ஜெயலலிதாவை எதிர்த்தவர்! சிகப்பு துண்டுடன் 55 ஆண்டுகள் போராடியவர்! யார் இந்த கம்யூனிஸ்ட் மகேந்திரன்?
சென்னை: சிவப்பு துண்டுடன் பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார் அமைச்சர் ஆனந்த்!
தமிழகத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர் சி.மகேந்திரன். இவர் தஞ்சை மாவட்டம், கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர். அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அது போல் மன்னார்குடியில் உள்ள மண்ணை ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரியிலும் திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியிலும் அவர் பயின்றார்.

பொதுவுடைமை சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட அவர், கல்லூரி காலங்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார். இவர் ஒரு ஆய்வாளரும் கூட சிகாகோவில் நடந்த 10ஆவது உலகத் தமிழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த 84 அறிஞர்களில் அவரும் ஒருவர்.
கடந்த இருபது ஆண்டுகளாக, மகேந்திரன் 'தாமரை' என்ற மாதந்தோறும் வெளியாகும் தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் . 1971 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 2015 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். ஆனாலும் அவர் வெல்லவில்லை.
இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு முதல் இவர் சிபிஐ தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றார். 2025 ஆகஸ்ட் 9 ஆம் தேதி இவர் கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முகநூல் பதிவு வெளியிட்டார். அந்த பதிவில் சுயநலத்திற்காக சிலரை தூக்கிப் பிடிப்பதும் தூக்கி எறிவது என குமுறல் தெரிவித்தார்.
கால வெள்ளத்தில் கம்யூனிஸ்டுகள் மாறிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் இவரின் குமுறலில் இடம்பெற்றது.
இந்த முகநூல் பதிவு சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பியது. இவ்வாறு கட்சியில் 55 ஆண்டு காலம் பயணித்த சி.மகேந்திரன் இன்று தவெகவில் இணைந்துள்ளார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்த அவர் ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை முதல்வர் விஜய் கொடுத்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் ஜாதி தோற்கடிக்கப்பட்டுள்ளதை அரசியலில் வியந்து பார்க்கிறேன். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை தவெகவின் தேர்தல் வெற்றி தோற்கடித்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
சி.மகேந்திரனுக்கு அமைச்சர் ஆனந்த், அடையாள அட்டை வழங்கி கட்சியில் இணைத்துக் கொண்டார். மாணவர் பருவத்திலேயே கம்யூனிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அகில இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) மூலம் தனது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார். தமிழகத்தின் பல்வேறு மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
சிறந்த எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர்: சி.மகேந்திரன் அரசியல் மேடைகளைத் தாண்டி, தனது கூர்மையான எழுத்துக்களால் அறியப்படுபவர்.
நூல்கள்: மார்க்சியம், உலகமயமாக்கல், சூழலியல் மற்றும் தமிழக அரசியல் குறித்து பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வம்: கம்யூனிச சித்தாந்தத்துடன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் (Eco-Socialism) இணைத்துப் பேசுபவர்களில் இவர் முக்கியமானவர். தமிழகத்தின் நீர்நிலைகள் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
தமிழ்ப் பற்று: தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சி உள்ளிட்ட தமிழர்களின் மரபு சார்ந்த விஷயங்களில் ஆழ்ந்த புலமையும், ஈடுபாடும் கொண்டவர்.
தற்போதைய அரசியல் களம்: தேர்தல் அரசியலைக் கடந்து, முற்போக்குச் சிந்தனையாளர்களை ஒருங்கிணைப்பதிலும், இளைஞர்களுக்குக் கம்யூனிசக் கொள்கைகளைக் கொண்டு சேர்ப்பதிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். பாசிச எதிர்ப்பு மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிகளை வலுப்படுத்துவதில் இடதுசாரிகளின் முக்கியக் குரலாக ஒலித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications