காஞ்சி சங்கராச்சாரியாரை 'பிரதமர்' மோடி கட்டி பிடிக்க தடை விதிப்பதே சனாதனம்: காங். பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: உலக நாடுகளின் தலைவர்களை எல்லாம் கட்டிப் பிடித்து ஆரத் தழுவுகிற பிரதமர் மோடியால் இந்தியாவில், தமிழ்நாட்டின் காஞ்சி சங்கராச்சாரியாரை கட்டி பிடிக்கவே முடியாது என தடை விதிப்பதே சனாதனம் என மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: தேசத்தை இருளின் பிடியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் எதையும் எதிர்பார்க்காத செயல் வீரர்களால் தான் முடியும். மோடி தினசரி ஒரு நாட்டிற்கு செல்கிறார். வெளிநாட்டு தலைவர்களையும் உலக மதங்களின் மதக்குருக்களை எல்லாம் கட்டிக்கொள்கிறார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் முதல் அரேபிய நாட்டு மன்னர்கள் வரை அனைவரையும் கட்டி அணைக்க முடிந்த சர்வ வல்லமை படைத்த பிரதமர் மோடியால், காஞ்சி மடத்தில் உள்ள சங்கராச்சாரியாரை கட்டி பிடிக்க முடியுமா? அது தான் சனாதனம்.

ஆயிரம் ஆண்டுகளாக போராடி வந்தாலும், சனாதனம் இன்றளவும் இருக்கிறது. சனாதனத்தை அழிக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு ஏன் வந்திருக்கிறது என்றால், நீதிமன்றங்களில் இன்றைக்கு வரும் தீர்ப்புகள் எல்லாவற்றையும் பார்த்து பதற வேண்டியுள்ளது. மனு நீதியை மேற்கொள் காட்டி தீர்ப்பிடுகின்ற நீதிமன்ற அவலங்கள் நடைபெற்று வருகிறது. நாட்டு மக்களுடைய வெறுப்பை தூண்டிவிட்டு,சனாதனத்தின் பெயரில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கூட நடக்காத கொடுமைகள் இன்றைக்கு நடக்கிறது.
பட்டியலின மக்கள் மீது சிறுநீர் கழிப்பது, பெண்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுப்பது போன்ற செயல்களை பா.ஜ.க, அரசாங்கம் சனாதனத்தின் பெயரில் நடத்தி கொண்டிருக்கிறார்கள். சனாதன கும்பலின் ஆயுதமாக மோடி உள்ளார். இந்த தேர்தலில் சனாதன வேறுகளை அகற்ற வேண்டும். இளைஞர்கள் மக்களிடையே சமூக வலைதளங்கள் மூலம் பா.ஜ.க அரசின் அவலங்களை எடுத்து சொல்லி இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
இந்த மாநாட்டில், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநித் ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பொய்யான பிரசாரத்தை பாஜகவினர் செய்து வருவதால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்?











Click it and Unblock the Notifications