காங்கிரஸ் அடிமையில்லை! TVKவிடம் ஏன் பேச கூடாது? திமுக-பாஜக நட்பு மட்டும் சரியா?- திருச்சி வேலுச்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி என்பது தேர்தலுக்கான ஒரு ஏற்பாடு.. அது நிரந்தரம் அல்ல.. புருஷன் பொண்டாட்டி மாதிரி வாழ்நாள் முழுக்க கழுத்து நீட்டிதாலி கட்டிடாரு. கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன் என்று சொல்ல.. அது இல்லை..

எனவே அதனால் அரசியலை நாம் அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். யாரையும் பார்ப்பது,பேசுவது என்பது எல்லா கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. காங்கிரஸ்காரன் மட்டும் பேசக்கூடாது என்றால் என்ன நியாயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார். அப்போது நெறியாளர் எழுப்பி கேள்விக்கு அளித்த பதில்களை இந்த பதிவில் பார்ப்போம்.

எப்போமே பாஜக டபுள் கேம் ஆடுவதாக குற்றம்சாட்டுவார்கள்.இந்த பக்கம் ஒரு ஆளை வைத்து பேசிவிட்டு, அந்த பக்கம் கூட்டணிக்கு பேசுவார்கள் என்று குற்றச்சாட்டுவார்கள். ஆனால் அந்தவேலையை இப்போது காங்கிரஸ் தமிழ்நாட்டில் செய்வதாக சொல்கிறார்களே..ஒரு பக்கம் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு தவெக உடன் பிரவீன் சந்தித்து பேசுகிறாரே என்று நெறியாளர் கேட்டார்.

Senior Congress leader Trichy Velusamy explained why we held discussions with the TVK

அதற்கு வேலுச்சாமி கூறுகையில், காங்கிரஸ் கட்சி தலைமை கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்று வரை அதிகாரப்பூர்வமாக குழு அறிவிக்கவில்லை. நாங்கள் ஒரு அரசியல் கட்சி. கூட்டணி என்பது யாருக்கும் யார் அடிமை சாசனம் கிடையாது..

கூட்டணி இருக்கிறது. அப்ப இந்த கூடடணியில் இருக்குற மற்றவர்கள் எல்லாம் வேறு யாரு கூடயும் பேசலன்னு அர்த்தமா? இல்லை இந்த கூட்டணியில் தான் கம்யூனிஸ்ட் இருககு.. அந்த கம்யூனிஸ்டும் காங்கிரசும் கேரளாவில் எதிர் எதிர் துருவங்களாக உள்ளன.

கூட்டணி என்பது தேர்தலுக்கான ஒரு ஏற்பாடு.. அது நிரந்தரம் அல்ல.. புருஷன் பொண்டாட்டி மாதிரி வாழ்நாள் முழுக்க கழுத்து நீட்டிதாலி கட்டிடாரு. கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன் என்று சொல்ல.. அது இல்லை.. எனவே அதனால் அரசியலை நாம் அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். யாரையும் பார்ப்பது,பேசுவது என்பது எல்லா கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. காங்கிரஸ்காரன்மட்டும் பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்..

( அப்போது வேறு யாரு கூட்டணி பேசுகிறார்என்று நெறியாளர் குறுக்கிட்டார் ) வேறுயாரும் பேசவில்லையா.. திமுகவில் இருந்து எல்லாரும் அமித்ஷாவை போய் பார்க்கவில்லையா.. பிரதமர் மோடியை போய் பார்க்கவில்லையா. அவர்களை நிகழ்ச்சிக்கு வருமாறு இவர்கள் கூப்பிடவில்லையா... (அது அரசு ரீதியான பேச்சுக்கள் தானே என்று குறுகிக்கிட்டார் நெறியாளர்) அரசு ரீதியாக என்று சொல்வது எல்லாம் சும்மா... இது எல்லாம் எங்களுக்கு தெரியாதா.. எங்களுக்கு எல்லாமே நல்லா தெரியும்..

அரசு ரீதியாக சந்தித்து நீங்கள் என்ன திட்டம் கொண்ட வந்தீர்கள்.. பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்று தானே சொல்றீங்க.. எந்த நிதியும் கொடுப்பது இல்லை என்று சொல்றீங்க.. அப்படீன்ற போது.. சும்மாபார்த்து வணக்கம் வைத்து என்ன புரோஜனம்.. அங்குள்ள அதிகாரமையம் (பாஜக), இங்குள்ள அதிகார மையத்திடையே (திமுக), வியாபாரத்தில், வணிகத்தில் உறவு இல்லையா.. தேடி பாருங்க தெரியும்..

தமிழகத்திற்கு நிதியை ஒதுக்குவது இல்லை என்று முதல்வரே 100 முறைக்கு மேல் கூறிவிட்டார்.. அப்புறம் ஏன் அதற்காக கோரிக்கை என்று சொல்கிறார்கள்.. ஆனால் அவர்கள் அங்கு போய் போய் அடிக்கடி பேசும் போது, இங்கு நாங்கள் யாருடனும் பேசக்கூடாது என்று எதுவும் உள்ளதா.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயமா? கூட்டணி என்பது ஒருஏற்பாடு தான்.. கணவன் மனைவி உறவு அல்ல.. ஒரு ஜனநாயக நாட்டில் கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும் தான்..

கூட்டணி ஆட்சியில் இருந்தால் அப்படி போய் நாங்க பேசுறது தப்பு. அதனை ஏற்கிறேன்.. மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளோமோ.. மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தால் நீங்கள் சொல்வது நியாயம். (காங்கிரஸ் மாநில தலைவர் கூட்டணி திமுக உடன் தான் உறுதி என்கிறாரே என்று நெறியாளர் கேட்டார்)..

நாங்கள் ஒன்றும் அடிமை கூடாரம் கிடையாது.. தலைவர்கள் என்பவர்கள் வருவார்கள்.. போவார்கள்.. ஆனால் காங்கிரஸ் என்பது தத்துவம்.. மற்ற கட்சிகளோடு எங்களை பார்க்காதீர்கள். மண்ணோடும் மக்களோடும் இரண்டற கலந்துவிட்ட கட்சி காங்கிரஸ்..

நான் இன்று வரை தெய்வமாக நினைப்பது காமராஜரைத்தான்.. தலைவர் என்ன சொன்னாலும் கைக்கொட்டிக்கொண்டு செல்பவன் காங்கிரஸ் காரனே இல்லை.. ஆரோக்கியமான வாதங்கள்நடக்கும்.. எந்த தலைவர் சொல்லி என்னை போன்ற நபர்கள் கேட்கவேண்டும்..

நீங்கள் சொல்லும் தலைவர்கள் எல்லாம் நான் முழு நேர அரசியலுக்கு வந்த போது பிறக்கவே இல்லை.. ஐவர் குழு அமைத்தது மாநிலத்தில இவர்களாக அமைத்த ஏற்பாடு.." என்று வேலுச்சாமி கூறினார். அவர் கொடுத்த நேர்காணல் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது..பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+