சேது சமுத்திர திட்டம்.. உச்சநீதிமன்ற வழக்கை முதலில் வாபஸ் வாங்குங்க.. பாஜகவுக்கு டிஆர் பாலு அட்வைஸ்
சென்னை: சேது சமுத்திர திட்டம் குறித்து பேசுகிற பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முதலில் உச்சநீதிமன்றத்தில் அத்திட்டத்துக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என திமுக மூத்த தலைவரான டி.ஆர்.பாலு எம்பி வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தன்னிச்சையான போக்கு கடும் கண்டனத்துக்குரியதானது. இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் திமுக எம்பிக்கள் நேற்று புகார் மனு அளித்தனர்.
திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு தலைமையிலான இக்குழுவினர், ஆளுநர் ரவிக்கு உரிய அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வலியுறுத்தியது. டெல்லி சென்ற திமுக குழுவினர் இன்று சென்னை திரும்பினர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு எம்பி கூறியதாவது: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்குதான். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை பாஜக திரும்பப் பெற வேண்டும். உச்சநீதிமன்ற வழக்கை வாப்ஸ் பெற்றுவிட்டுதான் சேது சமுத்திரம் குறித்து பாஜக பேச வேண்டும்.
திராவிட மாடல் என்பது பற்றி எதுவும் தெரியாதவர்கள் பேசுவார்கள். திராவிட மாடல் குறித்து தெரியாதவர்கள் உளறுவார்கள். இப்படி பேசுகிற, உளறுகிற நபர்களுக்கு எல்லாம் திமுகவினர் பதில் சொல்ல மாட்டார்கள். சமூக நீதியை நாம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பேசுகிறோம். சமூக நீதி எனும் பேசுகிற போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கருணாநிதி பற்றி பேசாமலா இருக்க முடியும்?
டெல்லியில் ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மனு கொடுத்தோம். ஆளுநர் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசியதை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த முடியாது.

நாங்கள் டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்த நிலையில்தான் ஆளுநர் ரவியும் டெல்லி புறப்புட்டு சென்றுள்ளார். ஜனாதிபதியை நாங்கள் சந்தித்ததன் தொடர்ச்சியாக ஆளுநர் ரவி டெல்லி சென்றிருக்கலாம். எங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. இவ்வாறு டிஆர் பாலு கூறினார்.
முன்னதாக ஆளுநர் ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழ்நாட்டில் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் ரவி சிக்கியுள்ள நிலையில் அவரது டெல்லி பயணம் முக்கியமனதாகப் பார்க்கப்படுகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன?












Click it and Unblock the Notifications