திமுக ஆட்சியில் செல்வாக்காக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம்.. முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் செல்வாக்கு மிக்க அதிகாரியாக செயல்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு, ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முக்கியத்துவம் குறைந்த பதவி வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தற்போது கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெக, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் நடைபெற்று வருகிறது.

Davidson Devasirvatham Shifted to Less Influential Role by Vijay Government

வழக்கமாக எந்த ஒரு புதிய அரசு பதவியேற்றாலும், முந்தைய அரசில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் விஜய் புதிதாக முதல்வராக பதவியேற்றதில் இருந்தே அதிரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறார்.

கடந்த ஆட்சியில் அதிகார மையம் போல வலம் வந்த உயர் அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாகவும், உளவுத் துறை கூடுதல் டிஜிபியாகவும் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு புதிய பொறுப்பை தவெக அரசு கொடுத்துள்ளது.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாகவும், உளவுத் துறை கூடுதல் டிஜிபியாகவும் இருந்தவருக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லாத பதவியை தவெக அரசு ஒதுக்கியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையில் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடமும் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக விஜய்யிடம் விசாரணை நடத்திய அதே நாளில் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தற்போது ஆட்சி மாற்றம் வந்ததும் முக்கியத்துவம் இல்லாத பொறுப்புக்கு மாற்றியுள்ளார் விஜய்.

தவெக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தலைமை செயலகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விஜய்யை சந்தித்து வாழ்த்து கூறினர். அன்றைய தினம் விஜய்யை சந்தித்து டேவிட்சன் தேவாசீர்வாதமும் வாழ்த்து கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+