Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் ஐக்கியமான ஜிகே வாசன்.. மூப்பனார் எப்படி இருந்தார் தெரியுமா? எக்ஸ்பர்ட் சொல்லும் ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

 Senior Journalist says that Moopanar never like to go for alliance with BJP

அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. அதில் ராமநாதபுரம் மக்களவை தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே இன்னும் தொகுதி பங்காடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் 4 மக்களவை தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டு வரும் நிலையில் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி 9 மக்களவை தொகுதி + 1 மாநிலங்களவை கேட்பதாக தெரிகிறது. ஆனால் திமுகவோ வெறும் 7 மக்களவை தொகுதிகளை கொடுக்க முன் வருவதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணையும் என்கிறார்கள். இல்லாவிட்டால் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு கொடுக்கப்படும் இடங்களில் ஒன்று மநீமவுக்கு ஒதுக்கப்படும் என்கிறார்கள். கமல் இந்தியன் 2 படத்திற்காக வெளிநாடு செல்லவுள்ளதால் அதற்கு முன்பே கூட்டணியையும் தொகுதியையும் இறுதி செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால் இன்னும் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக கூட்டணியை எடுத்து கொண்டால் புதிய நீதி கட்சி இணைந்துள்ளது. அது போல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. தமாகா அதிமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் யூடர்ன் போட்டுக் கொண்டு பாஜகவிடமே ஐக்கியமாகிவிட்டது.

ஜி.கே. வாசன் விளக்கம்: பாஜகவுடன் கூட்டணியை அமைக்க முடிவு செய்தது ஏன் என்பது குறித்து கூட கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் விளக்கியிருந்தார். தமிழக மக்கள் பாஜக ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே மக்களுடைய விருப்பத்தின் பேரில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணி எதிர்பார்த்த கூட்டணி என்றாலும் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறியிருப்பதாவது: 1999ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி சென்றதால் அக்கூட்டணியிலிருந்து விலகிய மூப்பனார், அந்த ஆண்டு புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

பாஜக எதிர்ப்பு: அது போல் 2001 ஆம் ஆண்டு திமுக பாஜக கூட்டணி அமைந்ததால் மூப்பனார் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதை வைத்து பார்க்கும் போது மூப்பனார் கூட்டணி விவகாரத்தில் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். ஆனால் அவருடைய மகன் ஜி.கே. வாசனோ பாஜகவுடன் தோழமையாக இருந்து வருகிறார்.

ஜி.கே.வாசனின் இந்த நிலைப்பாட்டால் அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அக்கட்சியினர் விலகி அதிமுகவில் இணையக் கூடும். மேலும் வாசன் கட்சி பாஜகவில் இணைந்ததால் அக்கட்சிக்கு அனுகூலம் ஏதும் கிடையாது. ஜிகே. வாசனுக்கு டெல்டா மாவட்டத்தில் சிறிய பகுதிகளான தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. இதை தாண்டினால் வாசனுக்கு செல்வாக்கு கிடையாது. இவ்வாறு தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன: 1996ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து பிரிந்த மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினார். 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. அப்போது 3 இடங்களில் தமாகா வென்றது. அந்த ஆண்டு மத்தியில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தார். இதனால் பிரதமராக வாஜ்பாய் தேர்வு செய்யப்பட்டார். பிறகு 13 மாதங்களில் கொடுத்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றுக் கொண்டார்.

திமுக- தமாகா முறிவு: இதனால் வாஜ்பாய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது அப்போது திமுக, பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- பாஜகவுடன் கூட்டணியில் இணைந்ததால் திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் கூட்டணி முறிவு ஏற்பட்டது. இதனால் 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் தமாகா கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் அனைத்து இடங்களிலும் இந்த கூட்டணி தோல்வியை தழுவின.

2001 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக தமாகா கூட்டணியில் இடம் பெற்றது. அப்போது 32 தொகுதிகளில் போட்டியிட்டு 23 தொகுதிகளில் மூப்பனார் கட்சி வென்றது. இப்படிப்பட்ட நிலையில் 2001 ஆம் ஆண்டு மூப்பனார் காலமானதை அடுத்து 2002 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

தமாகா மீண்டும் உதயம்: அந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிலைப்படுத்தியதால் வாரிசு அரசியலை எதிர்த்து காங்கிரஸில் இருந்து விலகிய ஜி.கே. வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு முற்பட்ட போது தமாகா இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையால் அந்த கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதையடுத்து வைகோவுடனான மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக தலைமையிலான கூட்டணியில் தமாகா இணைந்தது. அந்த தேர்தலில் ஜிகே வாசனின் தஞ்சை தொகுதியில் தமாகா சார்பில் என்.ஆர். நடராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் ஜி.கே. வாசனுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை பாஜக கொடுத்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தமாகா மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்த நிலையில்தான் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தமாகா பாஜகவுடன் கூட்டணி என அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+