"அதிமுக கள நிலவரம்" ? தமிழ்நாடு பாஜகவை 'நம்பாத' டெல்லி மேலிடம்.. யாரிடம் அறிக்கை கேட்டது தெரியுமா?
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக குறித்தும் தமிழ்நாட்டு கள நிலவரம் குறித்தும் தமிழ்நாடு பாஜகவை நம்பாமல் மூத்த மத்திய அமைச்சர் ஒருவரிடம் அறிக்கை கேட்டதாம் டெல்லி மேலிடம். இத்தகவல் ஊடகங்களில் வெளியானது முதலே தமிழ்நாடு பாஜக தலைவர்கள் ஆடிப் போயிருக்கிறார்களாம்.
தமிழ்நாடு பாஜக தலைமை தொடர்ந்து அண்ணா திமுகவுடன் மோதலில் ஈடுபட்டு வந்தது. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. இந்த முறை அதிமுக தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததை டெல்லி பாஜக மேலிடம் எதிர்பார்க்கவே இல்லையாம். அதிமுக தலைவர்கள் நிதானமாக எதிர்ப்பு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

பாஜகவுக்கு செட்பேக்: தேசிய அளவில் பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவையும் கடும் விமர்சனங்களையும் உருவாக்கிவிட்டது. "இந்தியா" கூட்டணி உடையும் என எதிர்பார்த்த பாஜகவுக்கு தமது கூட்டணியின் 2வது பெரிய கட்சியான அதிமுக வெளியேறியது அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியது. அதிமுகவின் கோபம் குறைந்து திரும்பவும் கூட்டணிக்கு வந்துவிடும் என எதிர்பார்த்த பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்தான். இதனை முன்வத்து தேசிய கட்சிகள் பாஜகவை விமர்சிக்கின்றன.
டெல்லியின் உத்தரவு: இதனைத் தொடர்ந்துதான் கள நிலவரம் தொடர்பான உண்மை அறிக்கையை பெறுவது என பாஜக மேலிடம் முடிவு செய்தது. தமிழ்நாடு பாஜக தலைவர்களை நம்பாமல் சென்னையில் முகாமிட்டிருந்த மூத்த மத்திய அமைச்சரிடம் இந்த அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டதாம். அண்ணாமலையின் பேச்சுகள், அதிமுகவின் எதிர்வினை, அதிமுகவின் முடிவில் இருக்கும் உறுதி இவை அனைத்தும் தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அமைச்சரிடம் அனுப்ப சொன்னதாம் டெல்லி தலைமை.
விரிவான ரிப்போர்ட் ரெடி: இத்னை ஏற்று கள நிலவர அறிக்கையை தயார் செய்த அந்த மத்திய அமைச்சர், மயிலாப்பூர் தொடர்புகளுடனும் ஆலோசனை நடத்தி அதிமுக -பாஜக உறவு விரிசலின் விளைவுகள் குறித்த மற்றொரு அடிசனல் அறிக்கையையும் எடுத்து சென்றாராம் அந்த சீனியர் மத்திய அமைச்சர். இந்த தகவல் ஊடகங்களில் வெளியானது முதலே தமிழ்நாடு பாஜக தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனராம். தங்களை நம்பாமல் சீனியர் அமைச்சரிடம் இப்படியான அதிமுக்கிய பொறுப்பை டெல்லி மேலிடம் கொடுத்தது சகுனம் சரியில்லையே எனவும் புலம்பிக் கொண்டிருக்கிறதாம் தமிழ்நாடு பாஜக.












Click it and Unblock the Notifications