எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி.. இதய ஆபரேசன் எப்போது..காவேரி மருத்துவமனை அறிக்கை
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். செந்தில் பாலாஜியை வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சரியான நடைமுறைகள் பின்பற்றாமல் ரிமாண்ட் செய்யப்பட்டால், ஆட்கொணர்வு மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் எடுத்து கூறினார். இந்த ஆட்கொணர்வு மனு ஏற்புடையது என்று தெரிவித்த அவர், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அவர் தனது வாதத்தில் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் மனைவியின் கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட்டு அனுமதி அளித்தது. தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாணை 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டி புழல் மத்திய சிறையில் இருந்து அதற்கான ஆணையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் விமலாவுக்கு இரவு சுமார் 20.30 மணிக்கு மெயில் மூலம் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. இதையடுத்து காவேரி மருத்துவமனை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவேரி மருத்துவமனை வளாகத்தில் இரண்டு உதவி ஆணையர்கள் 4 ஆய்வாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது. அவருடைய இதயத்தில் 90 சதவிகித அடைப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான முதல்கட்ட பரிசோதனைகளை செய்துள்ளனர்.
விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதற்கான மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அடிக்கடி அவரது இதய ரத்த ஓட்டம் கண்காணிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே செந்தில் பாலாஜிக்கு ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications