"சீக்கிரம் சீக்கிரம்".. செந்தில் பாலாஜி ஜாமீன்கோரி மனு தாக்கல்.. அவசர வழக்காக உடனே விசாரிக்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் ஜாமீன் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Senthil Balaji and bail petition filed by DMK Minister Senthil Balaji appeal for hearing as urgent case

அவரது சிறைக்காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்றைய தினமே செந்தில் பாலாஜியை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார். அதன்படியே, நேற்றைய தினம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இளங்கோ: செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோவுக்கும், அமலாக்கத்துறை வழக்கறிஞருக்கும் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை... செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார். அப்போது அவரிடம் 150 பக்க குற்றப்பத்திரிக்கை நகலும் அளிக்கப்பட்டது.

ஜாமீன்: இதையடுத்து, ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.

சிறைத்துறை உத்தரவு: அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

முதன்மை நீதிமன்றம்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், ஜாமீன் கோருவதற்கான வேலையை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் டீம் நேற்றே வேலையை துரிதமாக ஆரம்பித்தது.. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு, அந்த மனு விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.

எகிறும் எதிர்பார்ப்பு: அதன்படியே, இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் ஜாமீன் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. அவசர வழக்காக விசாரிக்க கோரியுள்ளதால், செந்தில் பாலாஜிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+