ஜாமீன் கேட்டு விடாது நீதிமன்ற கதவை தட்டும் செந்தில் பாலாஜி.. முட்டுக்கட்டை போடும் அமலாக்கத்துறை
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என்று அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
செந்தில் பாலாஜி கைது: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. ஒருமாத கால ஓய்வுக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் செந்தில் பாலாஜி.

குற்றப்பத்திரிக்கை: இந்த வழக்கில் அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக, 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஜூன் 16 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் மனு: இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாகக் குணமடையாத சூழலில், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
ஹைகோர்ட் தள்ளுபடி: இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது' எனக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்: இதனையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பரிசீலனைக்காக செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை அவர் தரப்பில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது
நீதிபதிகள் கருத்து: அப்போது நீதிபதிகள் பேலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு, "செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம், மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. செந்தில் பாலாஜியின் சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்தபோதும், உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிடப்படவில்லை.
நானும் கூகுள் செய்து பார்த்தேன். இதை குணப்படுத்த முடியும் என்றுதான் கூறப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும்" என்று தெரிவித்தது.
சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி: மேலும் செந்தில் பாலாஜி தரப்பில், "மனுதாரருக்கு பைபாஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் சில பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், brain stroke- க்கை ஏற்படுத்தும்" என்ற வாதத்தை முன்வைத்து வாதிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தில் சாதாரண ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மீண்டும் மனு தாக்கல்: இதனையடுத்து 3வது முறையாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் ஆஜராகி, 180 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில்இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அமலாக்கத்துறை எதிர்ப்பு: அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ்ஆகியோர் கடந்த 2016-17-ம் ஆண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது. செந்தில் பாலாஜியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் யார், யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், முகவரிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் உள்ளன. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டனர்.
3வது முறையாக தள்ளுபடி: இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இந்த வழக்கில் வரும் ஜனவரி 12 அன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி அறிவித்தார். இன்றைய தினம் அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து மூன்றாவது முறையாக செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டுகள் பதிவு: இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கேட்டு விடாது நீதிமன்ற கதவை தட்டியும் அமலாக்கத்துறை தடை செய்வதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications