Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தலை"க்கு தில்ல பாத்தீங்களா.. பாஜகவுக்கே டபுள் ஷாக் தந்த எடப்பாடி.."கமலாலய" வாசலில் விழுந்த "குண்டு"

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், விசாரணை தள்ளி போயுள்ளது. ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தேதி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி இன்று விசாரிக்கவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு கூடிவருகிறது.

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்.. இப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்... அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத காவலில் வைத்ததாக சொல்லி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

Senthil Balaji case and Chennai high court to give judgment in Senthil balaji case hearing today

விசாரணை: இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை சொன்னார்கள். அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு அளித்தார்..

ஆனால், அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை, அவர் 10 நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம், அதன்பிறகு சிகிச்சை வேண்டுமென்றால் சிறையில் இருக்கும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பை கூறி, மனுவையும் தள்ளுபடி செய்தார்.

உடனடி முடிவு: இப்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், 3-வது நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, சி.வி.கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக நியமித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றையதினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், விசாரிக்கப்படவில்லை.

"வழக்கமாக பட்டியலிடப்படும் வழக்குகளையும் கருத்தில் கொள்ள,வேண்டும்" என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியிருப்பதால், நாளைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இரு மாறுபட்ட தீர்ப்பில் எது சரி என்று தீர்ப்பு வரபோகிறது என்று தெரியவில்லை. ஆட்கொணர்வு மனுவில், கைது செய்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துவிட்டால், அது அமலாக்கத்துறையினருக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் என்று தெரிகிறது.. இதுகுறித்து நாம் அரசியல் நோக்கர்கள் சிலரிடம் விசாரித்தபோது, நம்மிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.

தீர்ப்பு: "இதற்கு முன்பு, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் முதல் ராகுல்காந்தி வரை பலரை அமலாக்கத்துறையினர் விசாரித்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் வராத ஒரு சிக்கல் இப்போது ஏன் வருகிறது? அமலாக்கத்துறையினருக்கு விசாரிக்கக்கூடிய அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி வழக்கில் சொல்லப்படுவது ஏன்? என்று தெரியவில்லை.

Senthil Balaji case and Chennai high court to give judgment in Senthil balaji case hearing today

இந்த வழக்கை 3வது நீதிபதியை கொண்டு, உடனடியாக விசாரிக்க போவது அமலாக்கத்துறையினருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது.. விசாரணை தேதியை காலதாமதம் செய்யாமல் செல்லாமல், உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது, சாதகமாக பார்க்கப்படுகிறது.. எனினும், இன்று தீர்ப்பு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தேதி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாட உள்ளதால் இந்த வழக்கை நாளைக்கு விசாரணைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதி, இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்தால் வரும் சனிக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தார்

விசாரணை: ஒருவேளை, கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று தலைமை நீதிபதி நாளைய தினம் உத்தரவிட்டாலும், வருகிற 24ம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் வரவுள்ள ஆட்கொணர்வு மனுமீதான வழக்கின் தீர்ப்புதான் முக்கியமானது.. அதேசமயம், அமலாக்கத்துறை கஸ்டடி கேட்டு தனிமனுவை தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளதையும் கவனத்தில் இங்கு கொள்ள வேண்டி உள்ளது.

கிளைமேக்ஸ்: இந்த வழக்கையும் தாண்டி, அமலாக்கத்துறையின் அதிகாரம் என்ன? என்பது பற்றிய விவாதம் வெடித்து வருகிறது.. மோசடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டால், 20 நாளில் ஜாமீன் கிடைத்துவிடும். ஆனால் பணம் மீட்கும் வரை ஜாமீனில் விடமாட்டேன் என்பது போல் அமலாக்கத்துறையின் ஷரத்துகள் சரியா? என்ற கேள்வியும், விவாதமும் தொடங்கி உள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும், இன்றைக்கு அமலாக்கத்துறையின் அதிகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. இதற்கு நீதிபதி நிஷா பானுவின் ஒற்றை தீர்ப்பு காரணமாக அமைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவது உட்பட எத்தனையோ விஷயங்களை ஆளுநர் தரப்பு செய்தபோதிலும்கூட, இந்த விஷயத்தை பொறுத்தவரை பாஜகவுக்கே வலிமை சேர்ந்து வருகிறது.. அதேபோல, செந்தில்பாலாஜியை தவறே செய்யாதவர்போல, திமுக தரப்பில் உயர்த்தி பிடித்து வருவது, திமுகவுக்குதான் மைனஸாக பார்க்கப்படுகிறது" என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+