"அல்லாடும் டீம்".. செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. "தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள்": நீதிபதி சுந்தர்
சென்னை: எந்த வழக்கை, யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர், செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். இதையடுத்து, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் சிறைக்காவல், 2 நாட்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், அன்றைய தினமே செந்தில் பாலாஜியை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.. அதன்படியே, செந்தில் பாலாஜியும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றப்பத்திரிகை: செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோவுக்கும், அமலாக்கத்துறை வழக்கறிஞருக்கும் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை... அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார். அப்போது அவரிடம் 150 பக்க குற்றப்பத்திரிக்கை நகலும் அளிக்கப்பட்டது.
ஜாமீன்: இதையடுத்து, ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.
சிறைத்துறை உத்தரவு: மேலும், அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டிருந்தார்.. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற செந்தில் பாலாஜி வழக்கறிஞர் டீம் களமிறங்கியது.
நேற்று முன்தினம் காலை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முதன்மை நீதிபதி எஸ். அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார்.
அப்போது நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அங்கேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம், சிறப்பு நீதிமன்றம்தான் இதுகுறித்து விசாரிக்க முடியும், அங்கேயே சென்று முறையிடுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
எதிர்பார்ப்பு: இதையடுத்து, எம்பி எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணிகுமார் ஆகியோர் நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர்.
ஆனால் நீதிபதி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பது சென்னை உயர்நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பு உயர்நீதிமன்றத்தை இன்று நாட உள்ளதாக தெரிகிறது. உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியபிறகு, ஸ்பெஷல் கோர்ட்டில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமர்வு: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது.
அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார். அப்போது, "இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீட்டு எப்படி ஏற்பது?" என்று நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார்.
மாற்று அமர்வு இல்லை: இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "மாற்று அமர்வும் இன்று இல்லை என்பதால்தான் தங்களிடம் முறையிடுவதாகவும், நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது" என்றும் தெரிவித்தார். எந்த வழக்கை, யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என நீதிபதி எம்.சுந்தர் கூறினார்..
இதையடுத்து, இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் சக்திவேல் விலகியது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications