செந்தில் பாலாஜி கேட்ட சான்ஸ்.. விடுவிக்கப்படுவாரா? வாதாட அனுமதிக்கப்படுவாரா? இன்று கோர்ட் உத்தரவு?
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணை: இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 67 கோடியே 40 லட்சம் ரூபாய் செந்தில் பாலாஜியிடம் இருந்ததாக சொல்கிறார்கள், ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. எனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது,
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் வாதிடும்போது, "கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதியப்பட்டுள்ளது. வங்கி கணக்கிலும் நிறைய பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, வீடு, அலுவலகங்களில் 30 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.. இந்த வழக்கு விசாரணையை முடக்கும் நோக்கில் தொடர்ச்சியாக மனுத்தாக்கல் செய்து வருகிறார். போதிய ஆதாரங்கள் உள்ளதால் செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
எதிர்பார்ப்பு: இதையடுத்து, கடந்த மார்ச் 28ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார். ஆனால், அதே நாளில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவில், மறுபடியும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி, இன்னொரு புதிய மனுவை தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீது மறுபடியும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்... அப்படி வாதிட அனுமதிக்கவில்லையானால், தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்று கோரியிருந்தார்.
புதிய மனு : இந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம் அமலக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.. செந்தில் பாலாஜியின் மனு மீது இன்று 17ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் காவல் நிறைவடைகிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications