செந்தில் பாலாஜி வழக்கில்.. இருவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! என்ன காரணம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பறிமாற்றம் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையுடன், சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் உத்தரவாத தொகை விவகாரத்திலும் முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.
தமிழக மின்சார துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இப்போது திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள செந்தில் பாலாஜி, முன்பு அதிமுகவில் இருந்தவர். குறிப்பாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

செந்தில் பாலாஜி
இருப்பினும், அப்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணமோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை தனித்தனியாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ரெய்டை தொடர்ந்து கடந்த 2023ல் செந்தில் பாலாஜி கைதும் செய்யப்பட்டார். ஓராண்டு சிறைக்கு பிறகே அவர் வெளியே வந்தார்.
அதேநேரம் இந்த வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு நேற்றைய தினம் சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.
நேரில் ஆஜர்
இந்த வழக்கை பொறுத்தவரை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி. சண்முகம், உள்ளிட்ட 13 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விசாரணையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜாராகிருந்தனர்.
நீதிமன்றம் உத்தரவு
முன்பு நடந்த விசாரிணையின் போதே இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால், அவர்கள் ஜாமீன் உத்தரவாத தொகை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஜெயராஜ் குமார், பழனி ஆகியோர் நீதிமன்றம் குறிப்பிட்ட ரூ.2 லட்சம் உத்தரவாதம் செலுத்தவில்லை.. இதனால் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், குற்றப்பத்திரிகையுடன், சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications