கண்டுகொள்ளாத திமுக தலைமை.. அதிருப்தியில் செந்தில் பாலாஜி.. நேரம் பார்த்து வேலையை காட்டும் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக தலைமை இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ள நிலையில், அவர் சோகத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனிடையே சமயம் பார்த்து செந்தில் பாலாஜியை மீண்டும் அதிமுக பக்கம் கொண்டு வந்து, எஸ்பி வேலுமணிக்கு செக் வைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருவதும் தெரிய வருகிறது.

சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்த பின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டப்பட்டு வருகிறார். ஏற்கனவே இருக்கும் டாஸ்மாக் வழக்கு, எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக புதிய வழக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று செந்தில் பாலாஜி கைது செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் தீவிரமாக இருக்கிறார்.

Senthil Balaji

ஆனாலும் செந்தில் பாலாஜி நீதிமன்றம் மூலமாக முன் ஜாமின் பெற்று விசாரணைக்கு சென்று வருகிறார். செந்தில் பாலாஜி மீது பிடி இறுகி இருப்பதால், சட்டசபையிலும் கூட அமைதியாகவே இருக்கிறார். இதனிடையே செந்தில் பாலாஜியை திமுக தலைமை கைவிட்டுவிட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளன. ஏனென்றால் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டது.

அப்போது திமுக தலைவர் ஸ்டாலினிடம் இருந்து அவருக்கு ஆதரவாக ஒரு பதிவு கூட வெளி வரவில்லை. ஆனால் முன்னாள் அமைச்சர் எவ வேலு வீட்டில் சோதனை நடந்த போது, விரைவாகவே ஸ்டாலின் கண்டனம் பதிவிட்டிருந்தார். இதனால் செந்தில் பாலாஜிக்கு வழக்கறிஞர் அணி மூலமாக சட்டப்பூர்வமான உதவிகளை மட்டுமே திமுக செய்து வருவது தெரிய வந்துள்ளது.

இதனால் செந்தில் பாலாஜியும் அதிருப்தி இருக்கிறார். ஸ்டாலின் மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் போன்றவர்களும் செந்தில் பாலாஜியிடம் சரிவர பேசுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேரம் பார்த்து எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து செந்தில் பாலாஜிக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏனென்றால் கொங்கு மண்டலத்தில் எஸ்பி வேலுமணி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் இருவருமே எதிராக நிற்கின்றனர். இப்படியான சூழலில் செந்தில் பாலாஜியை அதிமுகவுக்குள் கொண்டு வந்து எஸ்பி வேலுமணியை கழற்றிவிடலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக உடனான கூட்டணியில் அதிமுக இருப்பதால், வழக்குகளும் சுமூக தீர்வை எட்டிவிடும். உஇதனால் செந்தில் பாலாஜியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+