திருவல்லிக்கேணி ஸ்டேஷனில் ஆஜராவதிலிருந்து 6 நாள் விலக்கு கேட்கும் செந்தில் பாலாஜி! ஏன் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக எம்எல்ஏ பேர வழக்கில் முன்ஜாமீன் நிபந்தனையான சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து, தனக்கு 6 நாட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது.

senthil balaji tvk

எனவே ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஆகஸ்ட் 5-ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராவேன். நேரில் ஆஜராக இயலாது என திருவல்லிக்கேணி போலீஸாருக்கு நேற்றைய தினமே கடிதம் அனுப்பிவிட்டேன். இவ்வாறு அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு எதிராக திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வர போவதாகவும், அதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும், அதற்காக ரூ 35 கோடி வரை பணம் தர தயாராக இருப்பதாகவும் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை சிலர் அணுகினராம்.

அவ்வாறு அணுகி கைதானவர்கள் செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு நெருக்கமானவர்கள் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு அவர்கள் இருவரிடமும் விசாரிக்க போலீஸ் முடிவு செய்தது. ஆனால் இருவரும் தலைமறைவானதாக சொல்லப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜியும் அவரது தம்பி அசோக்குமாரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு போலீஸார் கரூரில் உள்ள வீட்டில் அவர்களது பெற்றோரிடம் சம்மன் கொடுத்துவிட்டுச் சென்றனர். ஆனால் இருவரும் காவல் துறையினர் சொன்ன நாளில் ஆஜராகவில்லை.

இதையடுத்து செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் தவெக எம்எல்ஏ பேர வழக்கில் முன்ஜாமீன் கோரிய நிலையில் அவர்கள் இருவரும் தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் பேரில் தினந்தோறும் செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக டாஸ்மாக் முறைகேடு விவகாரமும் அவரது காலை சுற்றியது. அதாவது 1000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நேற்றைய தினம் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முறைகேட்டை நடத்தியிருக்க முகாந்திரம் இருப்பதால் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறிய நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி டாஸ்மாக் வழக்கில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கமாக தவெக பேர வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்திருந்த செந்தில் பாலாஜி நேற்று வரவில்லை. இதுகுறித்து அவரது தம்பி அசோக்கிடம் கேட்ட போது "அண்ணனுக்கு உடல்நிலை பாதிப்பு, மருத்துவமனைக்கு சென்றுள்ளார்" என்றார்.

ஆனால் மாலையிலும் கையெழுத்திட வந்த அசோக்கிடம், செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது "அவர் பற்றி எனக்கு தெரியாது" என கூறிவிட்டார். இந்த நிலையில் இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு செந்தில் பாலாஜி வருவாரா என எதிர்பார்த்த நிலையில் அவர் வரவில்லை! காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+