செந்தில் பாலாஜி வெளிநாட்டுக்கு பறந்துடுவாரா? 3ஆவது நீதிபதியை நியமித்ததே தவறு.. முகுல் ரோத்தகி வாதம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு நாளில் சிறிது நேரம் விசாரிக்கலாம் என அவர் தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி வாதத்தை முன் வைத்தனர்.
அமைச்சர்செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த கைதை எதிர்த்து அவருடைய மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.
செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதமானது என மேகலா தாக்கல் செய்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கிற்கு 3ஆவது நீதிபதி அமர்வு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் 3ஆவது நீதிபதி, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என தீர்ப்பளித்தார். இதையடுத்து மேகலா இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்தார். அந்த மனு மீது கடந்த ஜூலை மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்பட்டது.
நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு நடந்த விசாரணையில் தங்கள் தரப்பு மேலும் வாதம் செய்ய வேண்டியுள்ளது என்பதால் இந்த வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். அதன்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்றைய தினம் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தொடங்கியது.
ஏற்கெனவே கபில் சிபல் வாதம் முடிவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதத்தை முன் வைத்து வருகிறார். அவர் வாதத்தில் கூறியிருப்பதாவது: 5 நாட்களுக்கு மேல் அமலாக்கத் துறைக்கு போலீஸ் காவல் கோர உரிமை இல்லை. செந்தில் பாலாஜியின் உடல் நிலை தற்போது தேறி வருவதால் அவரிடம் ஒரு நாளில் சிறிது நேரம் விசாரிக்கலாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்து மறுநாள் காவல் கோருகிறார்கள். செந்தில் பாலாஜி வெளிநாட்டுக்கு பறந்து செல்லக் கூடியவர் அல்ல. செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை. டிவிஷன் பெஞ்ச் தீர்ப்புக்கு பிறகு மூன்றாவது நீதிபதி நியமித்தது தவறு. வேண்டுமானால் பெரிய அமர்வை அமைத்திருக்கலாம். சட்டத்தை மாற்றி அமைக்க நீதிமன்றத்தில் அதிகாரமில்லை என முகுல் ரோத்தகி வாதத்தை முன் வைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications