மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய 18 பேர்.. அதில் நீந்தி கரை சேர்ந்தவர் ஒருவரே!
Recommended Video
சென்னை: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சென்று சின்னாபின்னமான 18 எம்எல்ஏக்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது அமமுக கட்சியினரை வேதனையடைய செய்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் எம்எல்ஏக்கள் ஆனவர் அதை மறந்து, அவர் இறப்புக்கு பின்னர் கட்சியில் பிளவு, சேர்ப்பு என ஏராளமாக நடந்ததை இந்த மக்கள் அறிவர். அந்த வகையில் ஓபிஎஸ்ஸை எதிர்க்கிறேன் பேர் வழி என கூறிக் கொண்டு தினகரனுக்கு ஆதரவாக 18 பேர் செயல்பட்டனர்.
விளைவு 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றும் ஒன்று ஆகவில்லை. இதையடுத்து தேர்தலை சந்திப்போம் என இடைத்தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் அதற்கு ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் எம்எல்ஏவாகிவிட்டார்.

செந்தில் பாலாஜி
இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரும், தினகரனுக்கும் அனைத்துமாகயிருந்தவருமான செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவினார். இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் கடந்த ஏப் 18-ஆம் தேதியும் மே 19-ஆம் தேதியும் நடைபெற்றது.

வொர்க் அவுட்
இதில் 18 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களையும் மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு வேறு வேட்பாளர்களையும் தினகரன் இறக்கினார். அதிமுக, திமுக, பாஜகவுக்கு எதிராக எத்தனையோ பிரச்சாரம் செய்தும் அமமுகவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை.

17 பேர் பாதிப்பு
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதிலிருந்து தினகரனை நம்பி சென்ற மீதமுள்ள 17 பேரின் எம்எல்ஏ பதவி புஸ்ஸாகிவிட்டது. இன்று அதிமுகவினரின் அனுதாபத்தை இந்த 17 பேரும் பெறும் நிலை ஏற்பட்டது.

அமமுக பாராட்டு
செந்தில் பாலாஜியோடு சேர்ந்து இவர்களும் கட்சி தாவியிருக்கலாம் என கருதுவதாகவே அமமுக வட்டாரங்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டு நீந்தி கரை சேர்ந்த செந்தில் பாலாஜியின் செயல்பாட்டை அமமுகவினரே பாராட்டி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications