ஆ ராசா + செந்தில் பாலாஜி + கனிமொழி.. திமுக பக்கம் மாற்றிய போகஸ்.. டெல்லி களமிறக்கிய "ஆபரேஷன்"
சென்னை: தமிழ்நாடு பக்கம் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ தனது போகஸை திருப்ப உள்ளது. இன்று அதிகாலையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகள், இடங்களில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பல்வேறு வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.

கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழவும் இதுவே காரணமாக எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை விசாரணை திரும்பும் என்று கூட சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அவர் அளித்த பேட்டியில், வெயிட் பண்ணுங்கண்ணா அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள், என்று கூறினார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போதே பதில் அளித்து இருந்தார். அதில், அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குநரா? அல்லது அவர் இணை இயக்குநரா? ஒன்றிய அரசில் அவர் என்ன நிதி அமைச்சராக இருக்கிறாரா? அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்து ஓடினாரே.. அவர் தானே?
என்ன பொறுப்பில் இருக்கிறார் அவர்? அந்த பக்கமே அவரை பார்க்க முடியவில்லையே? அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்?. தன்னிச்சையாக செயல்பட கூடிய அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேசலாம். அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது வெட்ட வெளிச்சம் ஆகிறது, என்று குறிப்பிட்டு இருந்தார்.
செந்தில் பாலாஜி ரெய்டு:
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வருமான வரித்துறை மூலம் வளைக்கப்பட்டு உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அதிக அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.
மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி ரெய்டில் சிக்கி உள்ளார்.
ஆ. ராசா

அண்ணாமலை சொன்னது போலவே தமிழ்நாடு பக்கம் டெல்லி தனது பார்வையை திருப்பி உள்ளது. அதன்படி, திமுக எம்பி, துணை பொதுச்செயலாளர் ஆ ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவையில் ராசாவின் பினாமிக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் ஆகும். 2004 - 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது ஆ ராசா இருந்த போது இந்த முறைகேட்டை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ஹரியானவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றிற்கு ரியல் எஸ்டேட் அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதில் இந்த நிலம் வாங்கப்பட்டதும் புகார் வைத்துள்ளது.
தனது நண்பர்கள், உறவினர்கள் நிறுவனங்கள் மூலம் பினாமி நிறுவனங்களை உருவாக்கி இந்த நிலத்தை ஆ. ராசா வாங்கியதாக இந்த அறிக்கையில் கூறப்படுகிறது. இதனால் அந்த நிலங்களை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அமலாக்கத்துறை தமிழ்நாடு பக்கம் தலையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு விசாரணையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜி வழக்கு
இன்னொரு பக்கம் திமுக எம்பி கனிமொழி மற்றும் ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிபிஐ அமைப்பின் இரண்டு பெரிய வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதில் வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிற்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதத்தை முன்வைத்துள்ளது.
மேலும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதத்தை முன்வைத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த தொடர் வழக்குகள் நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்கள் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது,.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications