20 ஹார்ட் டிஸ்க் எப்படி வந்தது? கடைசி வரை நிர்மல்குமார் பதில் சொல்லவில்லை.. செந்தில் பாலாஜி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் ஹார்ட் டிஸ்க் மற்றும் மின்சாரத்துறை தொடர்பான எந்த கேள்விகளுக்கும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதில் அளிக்கவில்லை என்று செந்தில் பாலாஜி சாடியுள்ளார். சட்டசபையில் பதில் அளிக்க திராணி இல்லாத தவெக அமைச்சர்கள், குதர்க்கமான வார்த்தைகளை பயன்படுத்தி அவையை நடத்தி கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த விசாரணைக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். சுமார் 2 மணி நேரம் வரை இந்த விசாரணை நடைபெற்றது. திமுக செயற்குழு கூட்டத்தில் கூட பங்கேற்காமல் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.

Senthil Balaji

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து செந்தில் பாலாஜி பேசுகையில், டாஸ்மாக் வழக்கு குறித்து பதியப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். இந்த விசாரணைக்கு ஆஜராகி உரிய முறையில் பதில் அளித்துள்ளேன். இப்போது விசாரணை தொடர்பாக பொதுவெளியில் பேச முடியாது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் உள்நோக்குடன் பதியப்பட்ட வழக்காகும்.

தவெக அரசு அமைந்த பின் ஆட்சி நடத்துவதை விட, எதிர்க்கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்வதை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்கள். இன்னும் 10 வழக்கு பதிவு செய்தாலும், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்டப்படி வாதாடுவதற்கு தயாராக இருக்கிறோம். சட்டசபை நிகழ்வு என்பது ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும். நாட்டின் நிலை குறித்து கேள்வி எழுப்பி பதில் பெற வேண்டும்.

ஆனால் தவெக அரசு, எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், பதில் தெரியாமல் கூச்சல் குழப்பத்தை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள். நேற்று நான் மின்சாரத்துறையில் 18 ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டதாக கூறினார்கள். ஆனால் கண்டுபிடித்தது 38 ஹார்ட் டிஸ்க் என்கிறீர்கள். மீதமுள்ள 20 ஹார்ட் டிஎஸ்க் எங்கிருந்து வந்தது என்று கேட்டேன்.

அதற்கு கடைசி வரை பதிலே சொல்லவில்லை. அதேபோல் வெள்ளை அறிக்கையில் திமுகவின் திட்டங்களையே சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். ரூ.14,500 கோடியாக மின்சாரத்துறைக்கு ஓராண்டில் இருந்த கடன், கடந்த ஆண்டு ரூ.933 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளீர்கள். ஆனால் சட்டசபையில் திமுக ஆட்சியில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்று சொல்வதை போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள்.

ஆனால் அதற்கு பதில் சொல்லாமல், வேறு விதமான வார்த்தைகளை முன்னெடுத்தார்கள். சட்டசபையில் பதில் அளிக்க திராணி இல்லாமல் குதர்க்கமான வார்த்தைகளை பயன்படுத்தி நடத்தி கொண்டிருக்கிறார்கள். மக்களும் நேரலையில் பார்த்து கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் சொல்லியதை போல் 3 ஃபைல்கள் இருந்தால், அதனை வெளிடுங்கள்.

கையில் இருந்தால் வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே.. நேற்று தயாராக இருந்தால், வெளியிட்டுருக்கலாம் தானே.. எந்தவிதமான ஒரு பயனும் இல்லாத அரசாக தவெக உள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடிய அரசால் தவெக ஆட்சி இல்லை என்று சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+