செந்தில் பாலாஜியை கைது செய்ய.. விஜய் போட்ட 2 பெரிய பிளானும் அடுத்தடுத்து காலி.. போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் மற்றும் தற்போது டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் என அடுத்தடுத்த சட்டப் போராட்டங்களில் செந்தில் பாலாஜி நிவாரணம் பெற்று வருவது, தவெகவின் அரசியல் தாக்குலுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) பதிவு செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவு, செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய சட்டப் பாதுகாப்பாகவும் அரசியல் ரீதியான பெரும் நிவாரணமாகவும் பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த கட்டுப்பாடுகளுடான உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை தீவிரமாக விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, செந்தில் பாலாஜியை உடனடியாகக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

senthil balaji vijay

அதே வேளையில், விசாரணையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சில கடுமையான நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது:

செந்தில் பாலாஜி தனது அசல் Passportஐ உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வழக்கில் தொடர்புடைய சாட்சிகளையோ அல்லது ஆதாரங்களையோ எவ்விதத்திலும் கலைக்கவோ, ஆதிக்கம் செலுத்தவோ முயலக் கூடாது.

இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தொடர் சட்டப் போராட்டங்களும் பின்னடைவுகளும்

முன்னதாக, தவெக சட்டமன்ற உறுப்பினருக்குப் பண ஆசை காட்டி பேரம் பேச முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கிலும் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தின் மூலமாக முன்ஜாமீன் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பார் உரிமங்கள், போக்குவரத்து டெண்டர் முறைகேடுகள் மற்றும் ₹32.81 கோடிக்கும் அதிகமான அரசு நிதி இழப்பு தொடர்பான 145 பக்க எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் DVAC களமிறங்கியது.

இந்த டாஸ்மாக் வழக்கில் அவரைப் பிணையில் விட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து, காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் எனக் கூறியிருந்தது. எனினும், உச்ச நீதிமன்றம் தற்போது கைதுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதன் மூலம், மாநில அரசின் அடுத்தகட்ட அதிரடி கைது நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

விஜய் வியூகத்திற்கு கிடைத்த சவால்

செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த இரு முக்கிய வழக்குகளையும் முன்வைத்து அரசியல் ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்த தவெக தலைமை தீவிரமாக திட்டமிட்டு வந்தது. குறிப்பாக, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து, DVAC உடனடி கைது நடவடிக்கையை மேற்காள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் மற்றும் தற்போது டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் என அடுத்தடுத்த சட்டப் போராட்டங்களில் செந்தில் பாலாஜி நிவாரணம் பெற்று வருவது, தவெகவின் அரசியல் தாக்குதல் வியூகங்களுக்குச் சவாலாக அமைந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்புத் துறை தனது பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. விசாரணை அமைப்பின் பதிலைப் பொறுத்தே இந்த வழக்கின் இறுதி போக்கினை தீர்மானிக்க முடியும் என்றாலும், தற்போதைய சூழலில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த இடைக்காலத் தடை, திமுக முகாமிற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+