வீல் சேரில் செந்தில் பாலாஜி! ஆம்புலன்ஸில் இருந்து கைத்தாங்கலாக இறக்கிவிடப்பட்ட சோகம்
சென்னை: புழல் சிறையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி லேசான தாடியுடன் முக கவசம் அணிந்தபடியே ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி 120க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையும் 3000 ஆவணங்களும் டிரங்க் பெட்டியில் வைத்து அமலாக்கத் துறையினர் கொண்டு வந்தனர்.

அவற்றை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்திலும் அக்டோபர் 19ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நவம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி S.அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, நவம்பர் 22ம்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை வழங்க கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 10ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது. அதாவது வரும் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் சாப்பிட்டதிலிருந்தே செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜியை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் பால் ரோஸ் நிறத்தில் சட்டையும் லைட் பாசி கலரில் பேன்ட்டும் அணிந்திருந்தார்.
அங்கு வந்த அவர் ஆம்புலன்ஸிலிருந்து இறங்குவதற்கே சிரமப்பட்டார். அவரை அங்கிருந்த போலீஸ்காரர் கைத்தாங்கலாக பிடித்தபடியே இறக்கிவிட்டார். இதையடுத்து வீல் சேரில் அவர் மருத்துவமனைக்கு உள்ளே அழைத்து செல்லப்பட்டார். முகத்தில் மிகுந்த சோகத்துடன் மாஸ்க் அணிந்தபடி இருந்தார் செந்தில் பாலாஜி.
அவருக்கு அங்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும் என தெரிகிறது. பரிசோதனைகள் நார்மலாக இருக்கும் பட்சத்தில் அவர் நாளை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என தெரிகிறது. அவரது சகோதரர் தலைமறைவாக இருப்பதை காரணம் காட்டி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications