19ம் தேதி ஜாமீன் விசாரணை வேண்டாமே.. செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்றது உயர்நீதிமன்றம்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரனை வரும் 19 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் 21 ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. ஏனெனில், மனு மீதான விசாரணையை 21 ஆம் தேதி நடத்த செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் முறையீடு செய்த நிலையில், முறையீட்டை ஏற்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி செய்தனர். அப்போது செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அமலாகக்த்துறை செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

அதன்பிறகு நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமனறக் காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்து வருகிறார். உடல் நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி கோரிய ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தற்போது வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு முதன்மை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று முன் தினம் சென்ன உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45-வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது.
டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கி விட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்" என வாதிட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்தூறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
இந்த நிலையில் தான், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications