Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ச்சீ" வெட்கமா இல்லை? தூக்கி எறியுங்க செந்தில் பாலாஜிய.. பாயும் பாஜக.. "விடமாட்டோம்".. திமிறிய திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி விதிகளை மீறி கைது செய்யப்பட்டு இருப்பது மனித உரிமைகளை மீறிய செயல் என திமுகவினர் கொந்தளித்து சொல்கிறார்கள்.. கைது நடவடிக்கை முறைப்படி நடந்துள்ளதா? அல்லது மனித உரிமை மீறலா?

தமிழக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் மத்திய அமலாக்கத்துறையினர் நேற்று காலை 9 மணிக்கு சோதனையை துவங்கி, இன்று அதிகாலை 2 மணிவரை நடத்தி உள்ளனர்.

Senthilbalaji health condition and dmk strongly condemns the arrest of senthil balaji

இதுதான் முறையா: பிறகு, அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகனத்தில் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வீட்டில் இருந்து வெளியே அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. காரில் படுத்துக் கொண்டு கதறியுள்ளார்.. அதனால் அவர் அங்கிருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர்.. இதனால் திமுகவினர் கடுமையான ஆத்திரத்தில் உள்ளனர்.. இதுதான் முறையா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வழக்கமாக, அமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால், அதுகுறித்து உடனடியாக சட்டப்பேரவை செயலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்படும்... பிறகு, சட்டப்பேரவை செயலகம் மூலம், சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும்.

கைது நடவடிக்கை: ஒருவேளை கைது சம்பவம் நடக்கும்போது, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தால், உடனடியாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும். சட்டப்பேரவை நடைபெறாத பட்சத்தில், 5 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.. இதுதான், அமலாக்கத்துறை மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கையாகும்.

ஆனால், இவைகளில் ஒன்றைகூட அதிகாரிகள் பின்பற்றப்படவில்லை என்பதே திமுகவினர் முன்வைக்கும் வாதமாகும்.. இதுகுறித்து செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்ஆர் இளங்கோ சொல்லும்போது, "சரியான எந்த தகவலையும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.. மனித உரிமைகளுக்கு எதிராக சித்திரவதைக்கு அவர் ஆளாக்கப்பட்டுள்ளார்.. அவர் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பதை கூட அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை என்று அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டி உள்ளார்.

Senthilbalaji health condition and dmk strongly condemns the arrest of senthil balaji

மா.சுப்ரமணியன்: இதனிடையே, செந்தில் பாலாஜியை சந்திக்க சுமார் 2.35 மணிக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் வந்தார்.. 3 மணி அளவில் அமைச்சர் எ.வ வேலுவும், 3.15 மணிக்கு உதயநிதி ஸ்டாலினும் வந்தனர்... பின்னாடியே சேகர்பாபுவும் வந்திருக்கிறார்..

மருத்துவமனை வளாக நுழைவு வாயில் பாதுகாப்பு பணிக்காக நின்ற மத்திய துணை ராணுவ படையினர் கெடுபிடிகளுக்கிடையே, திமுக வழக்கறிஞர்கள் சிலரும் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மனித உரிமை மீறல்: செந்தில்பாலாஜியின் மனநிம்மதியை குலைக்கும் விதமாக செயல்படவேண்டிய அவசியம் என்ன? இது முழுக்க முழுக்க மனித உரிமை மீறிய செயல்... திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது... ஒரு மாநில அமைச்சரை கைது செய்ய வேண்டுமானால், சபாநாயகருக்கும் முதல்வருக்கும் முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும்.. அப்படி எதுவுமே செய்யவில்லையே? எந்த தகவலையும் தெரிவிக்காமல் கைது செய்திருக்கிறார்கள்..

கைது நடவடிக்கையில், எந்த விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை. ஜனநாயக நாட்டில் தான் நாமெல்லாம் இருக்கிறோமா? இதற்குக் காரணமானவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..

எய்ம்ஸ் டாக்டர்கள்: இதற்கு நடுவில் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் வருகிறார்களாம்.. மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர்கள், இன்று காலை 11 மணிக்கு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரப்போகிறார்களாம்.. அவர்களின் ஆலோசனைப்படி, சென்னையிலேயே சிகிச்சை தரப்படுமா? அல்லது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா? என்பது குறித்து அமலாக்கத்துறைதான் முடிவெடுக்கும் என்கிறார்கள்..

அப்படியானால் ஓமந்தூரார் டாக்டர்களை அமலாக்கத்துறையினர் நம்பவில்லையா? எதற்காக திடீரென எய்ம்ஸ் டாக்டர்கள்? எப்படியாவது எய்ம்ஸ்ஸுக்கு அழைத்து சென்றுவிட அமலாக்கத்துறை துடிப்பது ஏன்? என்ற அடுத்தடுத்த கேள்விகளும் வட்டமடிக்க துவங்கி உள்ளன.

அமலாக்கத்துறை: ஆனால், பாஜகவினர் இதற்கு மறுப்பு சொல்கிறார்கள்.. இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் சீனிவாசன் ஒரு டிவி பேட்டியில் சொல்லும்போது, "அமலாக்க துறைகள் ரெய்டுக்கு வரும்போது, அவர்களுக்கு செந்தில்பாலாஜி தரப்பில் முறையாக ஒத்துழைப்பு தரவில்லை.. ஆனால், நேர்மையாக நின்று நிரூபிக்கவில்லை.. தந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை.. மருத்துவமனையில், எதுக்கு கட்சிக்காரர்கள்?

சீனிவாசன்: மனைவியோ, பெற்றோரோ வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.. வழக்கறிஞர்கள் உதவி தேவைப்பட்டால், வழக்கறிஞர்கள் சந்திக்கலாமே தவிர, அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதியில்லாமல், எப்படி கட்சிக்காரர்கள் செல்லலாம்? ஐசியூ,வில் நெஞ்சுவலி என்று அட்மிட் ஆகியிருக்கும்போது, சந்திக்க போகிறோம் என்றால் என்ன அர்த்தம்? சாதாரண மனிதர்களையே ஐசியூவில் அனுமதிக்கமாட்டார்களே.. கட்சிக்காரர்கள் போய் பார்த்தால், நெஞ்சுவலி அதிகமாகிவிடாதா? இது எப்படி மனித உரிமை மீறல்னு சொல்கிறீர்கள்? என்று கேட்கிறார்.

ஒருபடிமேலே சென்று, பாஜகவின் திருப்பதி நாராயணன் இந்த விவகாரத்தை கிண்டலடித்துள்ளார்.. "செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டத்திற்குட்பட்டு நடந்து கொள்வது தான் நல்லது. இல்லையேல் அறிவாலயத்தில் மானம் சந்தி சிரிக்கும். அ.ராசா, கனிமொழி கைதுகளின் போது கூட இவ்வளவு அலப்பறை இருக்கவில்லை.. ஆனால், இப்போது திமுக நடத்தும் நாடகம் வெட்கக்கேடானது.. திராவிட மாடல்.. திரைக்கதை, வசனம், நடிப்பு சுமார் தான். "அய்யோ அய்யய்யோ.. கொலை பண்ணுறாங்க..." என்ற காட்சி இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்" என்று விமர்த்திருக்கிறார்..

வெட்கமா இல்லை: இதைதவிர திருப்பதி நாராயணன், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது செந்தில் பாலாஜியின் கடமை. வெட்கமாக இல்லை? போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சாதாரண மக்களிடம் லஞ்சம் வாங்கி ஏமாற்றிய ஒரு நபருக்கு இப்படிப்பட்ட ஒரு ஆதரவா? தலைகுனிய வேண்டிய சூழ்நிலையிலே தமிழகம் இருக்கிறது. முதலமைச்சர் அவர்களே, சட்டத்திற்குட்பட்டு, உங்களுடைய கட்சியினரை நடக்க வையுங்கள்.

செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியுங்கள். அதுதான் திமுகவிற்கும், தமிழகத்திற்கும் நல்லது" என்று பேசியுள்ளார்.

சீமான் உட்பட பல்வேறு தரப்பினரும் கிட்டத்தட்ட இதே போன்ற விமர்சனத்தை முன்வைத்து வரும்நிலையில், திமுக தரப்பு மட்டும் அனலில் கனன்று கொண்டிருக்கிறது.. நடப்பதெல்லாம் மனித உரிமை மீறலா??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+