Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலை மிட்டாய் விற்கும் நடிகர்! யார் தெரிகிறதா? அட! அஜித் படத்தில் நடித்தாரே அவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னதிரையில் சீரியல் நடிகராக வலம் வரும் நடிகர் ஒருவர் சொந்த வாழ்க்கையில் கடலை மிட்டாய்க் கடை வைத்து விற்பனை செய்து வருவது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

'சூது கவ்வும்' படத்தின் மூலம் நம்பிக்கை கண்ணன் என்ற கேரக்டரின் மூலம் வெள்ளித் திரை ரசிகர்களிடம் அறிமுகமானவர் சிவக்குமார். ஆனால், உண்மையான பெயர் மறைந்து கதாபாத்திரத்தின் பெயரே நிலைத்து நின்றுவிட்டது.

Kadalai Mittai

ஒரு காலத்தில் சின்னதிரை சீரியல் உலகில் சக்கைப்போடு போட்ட 'மெட்டி ஒலி' மூலம் தொலைக்காட்சி உலகத்திற்கு அறிமுகமானவர் இவர். அதன் பின்னர் 'கோலங்கள்' 'வாணி ராணி', 'செல்லமே', 'பைரவி' , 'யாரடி நீ மோகினி' எனப் பல தொடர்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் வழியே நிலைத்து நின்று விட்டார். அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' , 'தெகிடி' எனப் பல படங்களில் நடத்தார். இப்போது மறுபடியும் சூது கவ்வும்' பாகம் 2இல் நடித்து வருகிறார்.

சின்னதிரை, கூடவே வெள்ளித்திரை என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் இந்த நம்பிக்கை கண்ணனை உண்மையில் பலே கில்லாடி என்றே சொல்லத் தோன்றுகிறது. நடிப்பைத் தொழிலாகச் செய்து கொண்டே இன்னொரு பக்கம் சொந்தமாக ஒரு கடலை மிட்டாய் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அவரே கடையின் கல்லா பெட்டியில் உட்கார்ந்து வியாபாரம் செய்து வருகிறார்.

நடிப்பே நல்ல வருமானம் தரும் தொழில்தான். அப்படி இருந்தும் இவர் ஏன் தனியாக ஒரு பிசினஸ் செய்கிறார்? இந்தப் பாமர தனமான கேள்வி பலருக்கும் தோன்றும். அதற்குச் சரியான பதிலைக் கேட்பதற்கு முன்னால், அவர் எப்படி நடிப்பு துறை பக்கம் வந்தார்? அதைத் தெரிந்து கொள்வதுதான் முக்கியம். இது தொடர் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ""சென்னை வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டரில் நான் கேண்டீன் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது எல்லாம் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கவில்லை. அப்போது தியேட்டருக்கு வந்த நண்பர் ஒருவர் என்னைப் பார்த்துவிட்டு, 'நீங்கள் சினிமாவில் நடிக்கலாமே?' என்று சொன்னார். கூடவே ஒரு உதவி இயக்குநர் போன் நம்பரை கொடுத்துப் போய் சந்திக்கச் சொன்னார். இது 2000 ஆம் ஆண்டு நடந்தது. அப்படி ஆரம்பித்ததுதான் நடிப்பு இந்த நடிப்பு பயணம்" என்று சொல்கிறார்.

"தியேட்டர் கேண்டீன் என்பது ஒரு காலத்திற்குப் பிறகு பெரிய வருமான தரும் தொழிலாக இல்லை. மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் வந்துவிட்டன. வருமானமும் குறைந்தது ஆடியன்சும் குறைந்ததால், ஒரு கட்டத்தில் தியேட்டர் உரிமையாளரே கேண்டீனை எடுத்து நடத்தத் தொடங்கினார்கள். சீரியல் நடிப்பு தொடர்ந்து கிடைக்காது. இரண்டு சீரியல் தொடர்ந்து நடிப்பேன்.

அடுத்து நடுவில் ஒரு மாதமோ அல்லது 2 மாசமோ நடிக்க வாய்ப்பே வராது. வீட்டில் அந்தக் காலத்தில் சும்மா இருக்க வேண்டி இருந்தது. அப்போது தான் யோசித்தேன், இந்த இடைவெளி விழும் காலங்களில் ஒரு தொழிலிருந்தால் அதைக் கவனித்துக் கொள்ளலாமே என்று. அப்படி ஆரம்பமானதுதான் இந்தக் கடலை மிட்டாய் பிசினஸ்" என்கிறார்.

இவரது கடையில் தேங்காய் மிட்டாய், எள்ளு உருண்டை, கடலை உருண்டை, கமர்கட் மிட்டாய், பொரி உருண்டை, பாதம் லட்டு. வழக்கமான லட்டு, முருக்கு எனப் பல உணவு பண்டங்கள் உள்ளன. நிறைய வாடிக்கையாளர்கள் வந்து போகின்றனர். அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகர்கள் கிஃப்ட் பாக்ஸ் வாங்கவும் வருகிறார்கள். ஆக, வியாபாரம் நன்றாகப் போகிறது. இந்த நடிப்பு தொழில் பல சந்தோஷங்கள் உண்டு. சில சங்கடங்களும் உள்ளன.

Kadalai Mittai

அதைப் பற்றிப் பேசிய நம்பிக்கை கண்ணன், "ராதிகாவுடன் சேர்ந்து சீரியலில் நடிக்கும் போது மக்கள் என்னைக் கொண்டாடினார்கள். போகின்ற இடங்களில் எல்லாம் அடையாளம் கண்டுபிடித்து வாழ்த்துவார்கள். அதே நேரம் சில சங்கடங்களும் இருக்கும். வில்லன் ரோலில் நடித்தால், மக்கள் வெறுப்புக்கு அதிகம் ஆளாவோம்.

குடும்பத்தில் கூட சில தர்மசங்கடங்கள் வரும். ஒரு முறை அக்கா தனது மகன் கல்யாணத்திற்கு முன்பே தேதி எல்லாம் கேட்டுக் கொண்டுதான் பத்திரிகை அடித்தார். நானும் வருவதாகச் சொல்லி இருந்தேன். திடீரென்று இரட்டை வேடத்தில் நடிக்க அதே தேதியில் வாய்ப்பு வந்தது. இரட்டை வேடம் என்பது அபூர்வம். எப்போதாவது தான் கிடைக்கும். இந்த சீரியலில் மகன்களாக இரட்டை வேடம் இல்லாமல் அப்பா பாத்திரமும் நான் தான். ஆகவே மூன்று ரோல். அக்காவிடம் எனது நிலைமையை விளக்கிச் சொன்னேன். அவர் பெரிய மனசுடன் அதை ஏற்றுக்கொண்டார். இதேபோல சங்கடமும் உண்டு" என்கிறார் நம்பிக்கை கண்ணன். இந்தப் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் அவர் நெகட்டிவ் ரோல் செய்திருந்தார். ஆனால், நிஜத்தில் இவருக்கு வாழ்க்கை மீது அபார நம்பிக்கை இருப்பதை உணர முடிகிறது. அதற்கு இந்தக் கடலை மிட்டாய்க் கடை ஒரு உதாரணம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+