அடிதடி கேஸில் கைதான என் கணவர் எங்கே? நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சீரியல் நடிகை கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு கிளப்பில் நடந்த அடிதடி சண்டையை தடுத்த என் கணவரை போலீஸார் கைது செய்து கொண்டு போய் எங்கள் கண்ணில் காட்டாமல் வைத்திருக்கிறார்கள் என சீரியல் நடிகை ரோஜா ஸ்ரீ கண்ணீருடன் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற ஏடிஜிபி மகன் தனது கணவரின் நண்பரை தாக்கிய போது இவர் தடுத்ததால் ஆத்திரமடைந்து ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக என் கணவரையும் நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர் என

police roja sri chennai

இதுகுறித்து நடிகை ரோஜா ஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: என் பேரு ரோஜா ஸ்ரீ. நான் ஒரு சின்னத்திரை நடிகை. ஒரு கிளப்பில் செல்வ பாரதி என்பவர் தூண்டில் ராஜா என்பவரை தாக்கியிருக்காங்க.

பாட்டில்

அதாவது பாட்டிலை கொண்டு ராஜாவை, செல்வ பாரதி அடித்திருக்கிறார். இதனால் கையில் அடிப்பட்டு காயம் ஆழமாகிவிட்டது. இரு நரம்புகள் பாதிக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அளவுக்கு போய்விட்டது.

ராஜா மீது தாக்குதல்

அப்போது கூட ராஜாவை விடாமல், செல்வ பாரதி, அவருடைய முகத்திலும் தாக்கினார். முகத்திலும் தையல் போடும் அளவுக்கு காயம் உள்ளது. இந்த தாக்குதல் விவகாரம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

செல்வபாரதி

உடனே போலீஸார், செல்வ பாரதியை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த செல்வபாரதி என்பவர் ஓய்வு பெற்ற ஏடிஜிபியின் மகன். இதனால் அந்த ஓய்வு பெற்ற ஏடிஜிபி, கமிஷனரிடம் சொல்லி இந்த கேஜை மேம்போக்காக நடத்தி வருகிறார்கள்.

நுங்கம்பாக்கம்

இந்த தகராறு நடந்த போது, எனது கணவர், அந்த இடத்தில் இருந்தார். இவர்களது சண்டையை தடுத்தார். அவர் எதுவுமே செய்யவில்லை என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இந்த நிலையில் என் கணவரை கைது செய்துவிட்டனர். அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக சொன்னார்கள்.

காவல் நிலையத்தில் கணவர் இல்லை

ஆனால் நான் வந்து பார்த்த போது இந்த காவல் நிலையத்தில் என் கணவர் இல்லை. காலையில் 9 மணிக்கு என் கணவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வருவார்கள் என நினைத்தேன். ஆனால் என் கணவரை காட்டவே இல்லை.

விசாரித்த போலீஸ்

நான் காலையில் (மே 29) இருந்து காத்திருக்கிறேன். நானும் என் அண்ணியும் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறோம். அப்போது சில போலீஸார் எங்களிடம் வந்து "உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்" என கேட்டனர்.

ரெய்டு ஏன்

அதற்கு நாங்கள், குழந்தைகளும், எங்களது அத்தையும் இருப்பதாக சொன்னோம். உடனே போலீஸார் இங்கே இருந்து என் வீட்டிற்கு கிளம்பி போய் அங்கு வீட்டை சோதனையிட்டனர். என் வீட்டில் எதற்காக ரெய்டு நடத்தினார்கள் என தெரியவில்லை.

4 ஆவணங்கள் மாயம்

என் வீட்டிற்கு இருந்து 4 ஆவணங்களையும் ஒன்றரை லட்சம் பணத்தையும் எடுத்துச் சென்றனர். தற்போது நடப்பது அடிதடி கேஸ். இதற்கும் என் வீட்டில் இருந்து டாக்குமென்ட் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ன செய்வேன்?

என் கணவர் தொழில் இதுதான்

என் வீட்டிலிருக்கும் ஆவணங்களை கொண்டு வந்து அவர் மீது வேறு ஏதாவது கேஸ் போட முயற்சிக்கிறார்கள். என் கணவர் பெயர் கணேஷ் குமார். அவர் interior design and construction-ல் இருக்கிறார். யாருக்காவது பணத்தை கடனாக கொடுப்பார். எங்களுக்கு பெரிய பேக்கிரவுண்ட் எல்லாம் இல்லை.

கெட்ட பழக்கமே கிடையாது

என் கணவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவர் ரெட் புல் பீர் மட்டுமே குடிப்பார். டீ, காபி கூட குடிக்க மாட்டார். அவருக்கு ஏற்கெனவே உடல்நிலை சரியில்லை. அவரை, போலீஸார், எங்கள் கண்ணில் காட்டாமல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் கணவரின் நண்பர் அதிமுகவில் இருப்பதால் என் கணவரையும் இப்படி சித்ரவதை செய்கிறார்கள். எப்படியாவது என் கணவரை காப்பாற்றி கொடுங்க என கண்ணீர் விட்டார். மேலும் தனது வீட்டை எப்படியெல்லாம் போலீஸார் தேடி அலங்கோலப்படுத்தியுள்ளார்கள் என்ற வீடியோவையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+