கே.கே.நகர் வீட்டில் மர்மங்கள்.. காஸ்ட்லி பைக்கில் வரும் இருவர்.. சிசிடிவியால் அதிர்ந்த சீரியல் நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கள் வீட்டில் எதுவுமே கிடைக்காததால் செருப்பை திருடி சென்றுவிட்டதாக சீரியல் நடிகை சங்கீதா புகார் கூறியுள்ளார்.

சென்னை கே.கே. நகர் பிடி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கீதா. இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் படத்திலும் இவர் சிறிய ரோலில் நடித்துள்ளார்.

Serial Artist Sangeetha gives complaint to police about miscreants movements

அது போல் சின்னத்திரையில் ஆனந்தராகம் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டு வாசலில் இருந்த இவரது காலனி உள்ளிட்ட பொருட்கள் சில நாட்களாக தொடர்ந்து காணாமல் போய் வருகிறதாம்.

இதனால் சந்தேகம் அடைந்த சங்கீதா நேற்றைய தினம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது காஸ்ட்லியான பைக்கில் வரும் சிலர் பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிடுகிறார்கள். பின்னர் தங்கள் காலால் அங்கிருக்கும் செருப்புகளை லிப்டில் தள்ளிவிட்டு திருடிச் சென்றுள்ளார்கள். இது குறித்து நடிகை சங்கீதா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்புக்காக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சங்கீதா தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: இருவர் மிகவும் கூலாக வீட்டிற்கு வந்து செருப்பை திருடிவிட்டு செல்கிறார்கள். எதற்காக வந்தார்கள் என தெரியவில்லை. அவர்களுக்கு வேறு எந்த பொருளும் கிடைக்காததால் செருப்பை திருடிச் சென்றிருக்கிறார்கள்.

Serial Artist Sangeetha gives complaint to police about miscreants movements

எனவே எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் தனது வீட்டில் வயதான தாய் மற்றும் குழந்தைகளோடு தனியாக இருப்பதால் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் நிறைய சங்கீதாக்கள் இருப்பதால் இவரை மாஸ்டர் பட நடிகை சங்கீதா என அழைக்கிறார்கள். இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்காவிட்டாலும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார். இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவர் வெளியூர் செல்வது குறித்தெல்லாம் வீடியோ வெளியிடுவார். அது போல் இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்த வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.

இவர் வில்லியாக நடிப்பதால் நிறைய பேர் இவரை திட்டினாலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். இவர் போடும் வீடியோக்களுக்கு சூப்பர் அக்கா, நன்றாக இருக்கிறது என சொல்லும் இவர்கள், சீரியலில் இவர் நடித்த பகுதியையும் வைத்து விவாதிப்பார்கள். இவர் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+