பஸ் பயணிகளுக்கு குஷி! டிக்கெட்டுக்கு இனி சில்லறை பிரச்சினையே வராது..எஸ்இடிசி பஸ்களிலும் வந்தது யுபிஐ
சென்னை: எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவு பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து விட்டது. பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் மூலமாக பணம் செலுத்தும் வசதி உள்ளது. கையில் ரொக்கமாக பணம் வைத்திருக்க தேவையில்லை.. சில்லறை பிரச்சினையில்லை என்பதால் பலரும் யுபிஐ மூலமாக பணபரிவர்த்தனை செய்வதையே விரும்புகிறார்கள்.

யுபிஐ வசதி அறிமுகம்: இந்த நிலையில், அரசு விரைவு பேருந்துகளிலும் யுபிஐ மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெபிட், கிரெடிட் கார்டுகள், யுபிஐ பரிவர்த்தனை வழியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 328 ஏசி பேருந்துகள் உள்பட 1068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் வரவேற்பு: இதற்கு முன்பாக மாநகர பேருந்துகளில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது விரைவு பேருந்துகளிலும் யுபிஐ மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி வந்துள்ளது. தொலை தூரங்களுக்கு செல்லும் பேருந்துகளில் சில நேரங்களில் சில்லறை தட்டுப்பாடு காரணமாக நடத்துனர்களுக்கும் - பயணிகளுக்கும் இடையே வாக்குவதம் ஏற்படுவதையும் பார்க்க முடியும்.
சில நேரங்களில் டிக்கெட் பாக்கி தொகையை அடுத்து வரும் மோட்டல்களில் சென்று சில்லறை மாற்றி கண்டர்கள் கொடுப்பதையும் பார்க்க முடியும். தற்போது யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இது போன்ற சிரமங்கள் தவிர்க்க முடியும் என்பதால் பயணிகள் மத்தியில் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
கியூ ஆர் கோடு மூலம்: இந்த வசதியை பொறுத்தவரை, நடத்துனர்களிடம் ஒரு க்யூ ஆர் கோடு இருக்கும். அவர்களின் டிக்கெட் பிரிண்ட் செய்யும் எந்திரத்தின் பின்புறம் பொதுவாக இந்த கோடு வைக்கப்பட்டு இருக்கும். டிக்கெட் நடத்துனரிடம் யுபிஐ மூலமாக பணம் செலுத்தும் விவரத்த்தை கூறினால் அவர் கியூ ஆர் கோடை உங்களிடம் காண்பிப்பார். அதன்பின் வழக்கமாக நாம் கடைகளில் பணம் அனுப்புவது போலவே .. இதற்கு பணம் அனுப்பலாம்.
டிக்கெட் தொகையை அவர் கூறிய பின் செலுத்திவிட்டு செலுத்திய தொகையை காட்டினால் டிக்கெட் கொடுக்கப்படும். தற்போது இந்த வசதி சென்னை மாநகர பேருந்துகளில் உள்ளது. சோதனை முயற்சியாக சில பேருந்துகளில் மட்டும் இதை பார்க்க முடியும். நீங்கள் பேருந்துகளில் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் இதை கவனித்து இருக்க முடியும்.
மாநகர பேருந்துகள்: சமீப காலமாக சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் கொடுக்க டிஜிட்டல் கருவிகளை நடத்துனர்கள் வைத்து இருப்பார்கள்.. மாநகர பேருந்துகளில் சோதனை முயற்சியாக அமலில் உள்ள இந்த வசதிதான் தற்போது அரசு விரைவு பேருந்துகளிலும் வந்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது தற்போது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. பெரிய மெட்ரோ நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கூகுள் பே, போன் பே மூலமாக மக்கள் பணம் செலுத்தி வருகிறார்கள். தற்போது அரசு பேருந்துகளில் யுபிஐ மூலமாக பணம் செலுத்தும் வசதி வந்திருப்பது பயணிகளுக்கு நல்ல வசதியாக இருக்கும் என்று தெரிகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications