சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாக்கடை அடைப்பு.. 2 நாளா யாரும் வராத அவலம்.. நாறிப்போன ஓபிஎஸ் வீடு!

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வீட்டில் கழிவுநீர் பிரச்சனை ஏற்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் வீட்டில், ரெண்டு லாரி நிறைய சாக்கடைகளை அள்ளி போட்டு முடிக்கவே ரெண்டு நாள் ஆகிவிட்டதாம்.. இதனால் அவரது வீடே நாறி போய்விட்டதாம்!

சென்னை க்ரீன்வேஸ் சாலையிலுள்ள பொதிகை இல்லத்தில் தான் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வசித்து வருகிறார். இந்த வீடு ஓபிஎஸ்-க்கு ரொம்ப ராசியான வீடு என்று சொல்லப்படும்.

Sewage Problem in Dy CM O Panneerselvams house in Greenways Road

இந்நிலையில் போன வாரம், அவரது வீட்டில் சாக்கடை அடைத்து கொண்டது. அதாவது மெயின் கேட் வரை சாக்கடை அடைத்து கொண்டுவிட்டதால், அதை கிளீன் செய்வது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. அதனால், கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு போன் செய்து புகார் தரப்பட்டது.

ஓபிஎஸ் வீடு என்றதும் விழுந்தடித்து கொண்டு ஓடிவருவார்கள் என்றுதானே நினைப்பீர்கள்.. அதுதான் இல்லை.. நிறைய முறை போன் செய்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை போல தெரிகிறது. இதனால் ஓபிஎஸ் வீடே நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இவர்களது வீடு நாறிப்போனதும் இல்லாமல் அக்கம்பக்கம் வீடுகளிலும் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மொத்தமாகவே நாற ஆரம்பித்துள்ளது.

நேரமே சரியில்லை.. தமிழிசை செல்போன் திருட்டு.. பிரஸ் மீட்டில் மர்ம நபர் கைவரிசை நேரமே சரியில்லை.. தமிழிசை செல்போன் திருட்டு.. பிரஸ் மீட்டில் மர்ம நபர் கைவரிசை

இதனால் டென்ஷன் ஆன ஓபிஎஸ், ஆபீஸ் அதிகாரிகளிடம் விஷயத்தை சொல்ல, அவர்களோ கழிவுநீர் அகற்று வாரிய உயரதிகாரிக்கு போனை போட்டு காய்ச்சி எடுக்க.. அதன் பிறகுதான் ஆட்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

ஓபிஎஸ் வீட்டு சாக்கடையை கிளின் செய்யவே 2 நாள் ஆயிடுச்சாம்.. கடைசியில் 2 லாரி நிறைய கழிவுநீரை அள்ளி கொட்டி பிறகுதான் நிலைமை கொஞ்சம் சரியானதாம். சென்னை முழுக்க இதுமாதிரி நிறைய சாக்கடை அடைப்புகள் ஏற்பட்டு வருவதால், துணை முதல்வர் வீட்டுக்கு உடனடியாக ஆட்களை அனுப்பவில்லை என்று துறை சார்பில் விளக்கம் சொல்லப்படுகிறது.

English summary
It is said that, Sewage problem in O Panneerselvams house and the work was delayed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X