‛‛உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்’’.. ஆசையோடு போன என்ஜினீயருக்கு நேர்ந்த விபரீதம்.. சென்னையில் ஷாக்
சென்னை: சென்னையில் சமூக வலைதள மூலம் பழக்கமான 19 வயது இளம்பெண் உல்லாசத்துக்கு அழைத்த நிலையில் ஆசையாக சென்ற சாப்ட்வேர் என்ஜினீயர் சிக்கலில் சிக்கி கொண்டார். அவரை அந்த பெண் தனது ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' பார்ட்னர் உள்பட 3 பேருடன் சேர்ந்து அடித்து உதைத்ததோடு, பணம் பறித்த திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 37. இந்நிலையில் தான் சமீபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயருக்கும் 19 வயது நிரம்பிய பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி சமூக வலைதளங்கள் மூலம் பேசி கொண்டனர். அதன்பிறகு செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையேயான பந்தம் நெருக்கமானது. அந்த இளம்பெண், சாப்ட்வேர் என்ஜினீயரிடம் கொஞ்சி கொஞ்சி பேசியுள்ளார்.
மேலும் ‛‛உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை நான் காதலிக்கிறேன்'' என இனிக்க இனிக்க பேசியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண், சாப்ட்வேர் என்ஜினீயருக்கு போன் செய்து பேசினார். அப்போது அவர் தனது பெற்றோர் வீட்டில் இல்லை. எம்ஜிஆர் நகரில் உள்ள வீட்டுக்கு தனியாக வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டவுடன் சாப்ட்வேர் என்ஜினீயர் உடனடியாக எம்ஜிஆர் நகரில் அந்த இளம்பெண் கூறிய முகவரியில் இருக்கும் வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். இந்த வேளையில் தான் வீட்டில் மேலும் 2 ஆண்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களை பார்த்து சாப்ட்வேர் என்ஜினீயர் பயந்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணிடம் அவர்கள் யார்? அவர்கள் ஏன்? இங்கு உள்ளார்கள்? என கேட்டுள்ளார். இந்த வேளையில் தான் இளம்பெண்ணின் சுயரூபம் தெரியவந்துள்ளது.
அதாவது இளம்பெண் தனது வீட்டில் இருந்த 2 பேருடன் சேர்ந்து சாப்ட்வேர் என்ஜினீயரை தாக்கி உள்ளனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.40 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளதோடு, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரத்தை அவர்கள் பணபரிவர்த்தனைக்கான செயலி மூலம் மாற்றி கொண்டனர். மேலும் ரூ.15 ஆயிரம் கேட்டு மிரட்டினர்.
பயந்துபோன சாப்ட்வேர் என்ஜினீயர் தன்னை விடுவித்தால் வீட்டுக்கு சென்று பணத்தை எடுத்து வந்து தருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசுக்கு சென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இங்கிருந்து சென்று பணத்தை எடுத்து வரும்படி இளம்பெண் உள்பட 3 பேரும் சாப்ட்வேர் என்ஜினீயரை மிரட்டி அனுப்பினர். அங்கிருந்து புறப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் நேரடியாக போலீஸ் நிலையம் சென்று சம்பவம் குறித்து தெரிவித்து புகாரளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் உள்பட 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில் இளம்பெண்ணுடன் கைதான நபர்களின் பெயர்கள் எழுமை மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதில் எழுமலை என்பவர் அந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதும் தெரியவந்தது. அதாவது அந்த இளம்பெண்ணின் கணவர் கொலை வழக்கில் சிறையில் உள்ள நிலையில் அவர் எழுமலையுடன் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' உறவில் இருப்பதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications