பெருமாளும், முருகனும் செய்த கேவலம்.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கு போன தேவி.. பாலியல் புகாரில் இன்னொரு பள்ளி
சென்னையில் மேலும் ஒரு பள்ளி மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளது
சென்னை: பெருமாளும், பால முருகனும் செய்த வேலையை பார்த்தீங்களா.. இருவருமே பள்ளியின் நிர்வாகிகள்.. இருவருமே தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கும், பெண் ஊழியர்களுக்கும் செக்ஸ் டார்ச்சர் தந்தார்களாம்.. ஆம்.. சென்னை மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மீது பாலியல் புகார் போலீசில் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் தருபவர்கள் குறித்த புகார்களும் போலீசுக்கு வந்த வண்ணம் உள்ளன.

திமுக
திமுக அரசின் இந்த நடவடிக்கையை பார்த்த, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் தற்போது துணிந்து சோஷியல் மீடியாவில் புகார்களை தந்து வருகிறார்கள்.. அந்த புகார்களின் பேரில் கைது நடவடிக்கைகளும் ஆரம்பமாகி உள்ளன.. விசாரணைகளும் கிடப்பில் போடாமல் உடனுக்குள் நடந்து வருகிறது.. அப்படித்தான் இப்போது மற்றொரு பள்ளி குறித்த பாலியல் புகாரும் போலீசுக்கு வந்துள்ளது.

மடிப்பாக்கம்
சென்னை மடிப்பாக்கத்தில் கலைமகள் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது.. இதன் நிறுவனர் பெயர் பெருமாள்.. இவரது வாரிசுகள்தான் இந்த பள்ளியின் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.. இந்நிலையில் பெருமாள் மற்றும் அவரது மூத்த மகன் பால முருகன் மீதுதான் பாலியல் புகார் கிளம்பி உள்ளது.. புகாரை சொன்னது மாணவிகள் இல்லை.. பெருமாளின் இளைய மகன் வெங்கட்ராமனின் மனைவி தேவி என்பவர்தான் புகாரை தந்துள்ளார்.

போலீஸ்
அதுவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவில் துணை ஆணையர் ஜெயலட்சுமியையே நேரில் சந்தித்து புகார் தந்திருக்கிறார்.. இந்த புகாரை பற்றி தேவி சொல்லும்போது, "கலைமகள் வித்யா மந்திர் பள்ளியின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகளான பெருமாளும், பால முருகனும் சேர்ந்து அந்த பள்ளியின் டீச்சர்கள், மாணவிகள், அந்த ஸ்கூலில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்.. நான் அந்த பள்ளி நிர்வாகத்தில் வேலை பார்த்தபோது, இதை பற்றியெல்லாம் தெரியவந்தது.

மறைவு
சமீபத்தில் என் கணவர் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்.. இப்படிப்பட்ட சூழலில், அவர்கள் 2 பேரும் எனக்கும் பாலியல் தொந்தரவு தருகிறார்கள்.. இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.. இந்த விஷயம், பள்ளி நிர்வாகத்தினர் எல்லாருக்குமே தெரியும்.. ஆனாலும் அதை மூடி மறைக்கவே முயற்சி செய்கிறார்கள்..

ஆபத்து
பள்ளி மாணவிகளின் எதிர்காலத்தை கருதியே இந்த புகாரை இப்போது நான் தந்துள்ளேன்.. இதனால் என்னுடைய உயிருக்கும், என்னுடைய இரண்டு பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது.. எனவே, நான் தந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பெருமாள் மற்றும் பால முருகனை விசாரித்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.. இந்த குற்றச்சாட்டுக்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் போலீசில் தந்திருக்கேன்" என்றார் தேவி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications