சென்னை ஐஐடியில் தலித் மாணவிக்கு கூட்டு பாலியல் கொடுமை... மேற்கு வங்க மாணவர் கைது - 7 பேருக்கு வலை!
சென்னை: சென்னை ஐஐடியில் 2020 ஆம் ஆண்டு பட்டியலின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவனை சென்னை போலீஸ் கைது செய்து விசாரணைக்கு
அழைத்து வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பட்டியலின மாணவி கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்துள்ளார்.
அவரை 3 மாணவர்கள் உட்பட 8 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் துறை சார்ந்த பேராசிரியர் எடமன பிரசாத்திடம் புகாரளித்துள்ளார்.

சாதிரீதியாக அவமானம்
புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காத பேராசிரியர் பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவியை சாதி ரீதியாக அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவர்கள், தங்களை தட்டிக்கேட்க யாருமில்லை என்று அறிந்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கின்றனர்.

நடவடிக்கை எடுக்காத ஐஐடி நிர்வாகம்
தொடர் பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஐஐடி புகார் கமிட்டியிடம் கடந்த 2020 ஆம் ஆண்டு தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த ஐஐடி நிர்வாகம், மாணவியின் புகாரில் உண்மை இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்ததாக கூறப்படுகிறது.

3 முறை தற்கொலை முயற்சி
பேராசிரியரிடமும், ஐஐடி புகார் கமிட்டியிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனம் உடைந்த மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்திடமும், மயிலாப்பூர் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்து இருக்கிறார் மாணவி. அங்கு சென்றும் மாணவியை கொடுமைபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாதர் சங்கம் புகார்
இறுதியாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்திடம் புகாரளித்திருக்கிறார் மாணவி. இதனை விசாரித்த மாதர் சங்கத்தினர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாணவி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். 10 மாதங்களுக்கு மேலாக வழக்கு கிடப்பில் போடப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்கள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், மயிலாப்பூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

மேற்கு வங்க மாணவர் கைது
மாதர் சங்கத்தின் குற்றச்சாட்டை அடுத்து இந்த விவகாரம் பூதாகரம் எடுத்தது. இந்த வழக்கை கையில் எடுத்த சென்னை காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட மாணவர்களை கைது செய்ய மேற்கு வங்கம் விரைந்தனர். அங்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வந்த 30 வயதான கொல்கத்தாவை மாணவர் கிங்ஸ் தேப்சர்மாவை கைது செய்த தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்து துறைமுகம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications