சென்னையிலும் விழுந்த பொள்ளாச்சி பயங்கரத்தின் நிழல்.. பெண்கள் விடுதியில் பாலியல் தொல்லை!
Recommended Video

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் அதன் உரிமையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரே ஒரு பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இங்குள்ள பெண்களுக்கு அதன் உரிமையாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து மானாமதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறுகையில் விடுதி உரிமையாளர்களான தாமஸ் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் தங்கள் நண்பர்களை விடுதிக்கு அழைத்து அங்கேயே மது அருந்துகின்றனர்.

வீடியோ
பின்னர் மது போதையில் அவர்கள் அனைவரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மதுபோதையில் உரிமையாளர்கள் தாமஸும் ஆறுமுகமும் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை வீடியோவாக எடுத்து அந்த ஆதாரத்தை போலீஸிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து தாமஸ், ஆறுமுகத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி அனுமதி
அதற்கு அந்த பெண் ஒத்துழைக்காததால் அவரை தாக்கியதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார். ஆதம்பாக்கத்தில் இது போல் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் குளியலறையில் கேமரா வைத்தாக திருச்சியைச் சேர்ந்த சஞ்சய் கைது செய்யப்பட்டார்.

4 பேர் கைது
அதுபோல் பொள்ளாச்சியில் பெண்களை காதல் வலையில் விழ வைத்து நண்பர்களோடு அந்த பெண்களை பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி வந்ததை அடுத்து புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி
இந்த சூழலில் இது போன்று சென்னையிலும் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை துன்புறுத்தும் சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. ஆதம்பாக்கம் சம்பவத்தை அடுத்து விடுதிகள் முறைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications