தவெகவுக்கு வந்த அதிமுக ஓட்டுகள்.. ஷாஜகான் ஏன் இவ்வளவு ஹேப்பி? திமுகவுக்கு என்ன சொல்றார் பாருங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் வழங்கிய நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த தீர்ப்புதான் இந்த இடைத்தேர்தல் முடிவு. தமிழக வெற்றிக் கழக ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதன் எதிரொலிப்புதான் இந்த முடிவு. மக்கள் அளித்துள்ள வாக்குகள், ஆட்சியின் செயல்பாடுகள் மீதான அவர்களுடைய ஆதரவை வெளிப்படுத்துகின்றன என்று அமைச்சர் ஷாஜகான் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.. தாராபுரத்தில் ஆரம்பத்தில் சில சுற்றுகளில் பின்தங்கிய தமிழக வெற்றிக் கழகம், அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்று வருகிறது. எனினும், தவெகவின் இந்த தடுமாற்றம் பலரையும் கவனிக்க வைத்துள்ளது..

Shahjahan News TVK News DMK News

மதுராந்தகம் - தாராபுரம்

அதேபோல மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே தவெக முன்னிலையில் இருந்து வருகிறது. இந்தத் தேர்தல் நிலவரம் குறித்து தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கருத்து தெரிவித்துள்ளார்..

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேலே போட்டியிட்டார். இந்த நிலையில், தவெக முன்னிலை பெறுவது குறித்தும், திமுகவின் விமர்சனங்கள் குறித்தும் அமைச்சர் ஷாஜகான் பேசியுள்ளார்..

அமைச்சர் ஷாஜகான்

செய்தியாளர்களிடம் ஷாஜகான் பேசும்போது "தமிழக முதலமைச்சர் விஜய் வழங்கிய நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த தீர்ப்புதான் இந்த இடைத்தேர்தல் முடிவு. தமிழக வெற்றிக் கழக ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதன் எதிரொலிப்புதான் இந்த முடிவு. மக்கள் அளித்துள்ள வாக்குகள், ஆட்சியின் செயல்பாடுகள் மீதான அவர்களுடைய ஆதரவை வெளிப்படுத்துகின்றன..

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அவரே போட்டியிட்டு முன்னிலை பெற்றுள்ளார்.

இந்த முடிவு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுகுதிரை வேரம் குற்றச்சாட்டுகளை மறுத்து, மக்களின் வாக்குகள் தான் உண்மையான தீர்ப்பு என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதலிடத்தில் தவெக

மதுராந்தகம் தொகுதியில் கடந்த முறை 2வது இடத்தைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம், இப்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதிமுகவின் வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்துக்குச் சென்றுள்ளதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றியை நோக்கி முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது..

தவெக ஆட்சிக்கு எதிராக அடிப்படை ஆதாரம் இல்லாமல் குதிரை பேரம் என்று அவதூறு பரப்பினார்கள். ஆனால், அந்த அவதூறுகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாக்குகள்தான் உண்மையான தீர்ப்பு என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன..

திமுக - ஆ.ராசா

தேர்தல் தோல்வியிலிருந்து திமுக முதலில் வெளியே வர முயற்சிக்க வேண்டும். திமுக தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, ஆக்கபூர்வமான அரசியலை மேற்கொள்ள வேண்டும்.. அதை விட்டுவிட்டு தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பக் கூடாது. ஆ.ராசா போன்றவர்களை வைத்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுவது கண்டிக்கத்தக்கது. அரசியல் கருத்து வேறுபாடுகளை அவதூறுகளின் மூலம் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்..

மதுராந்தகம் தொகுதியில் தவெக முதலிடத்தில் இருப்பதும், தாராபுரத்தில் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெறுவதும் அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன. தமிழக வெற்றிக் கழக ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடாகவே இந்த இடைத்தேர்தல் நிலவரத்தைப் பார்க்கிறேன்" என்று அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+