ஸ்டன் ஆன ஆஸி. வீரர்கள்.. கடைசி ஓவரில் உள்ளே வந்த ஷமி.. அதன்பின் நடந்த மேஜிக்.. ஆட வச்சிட்டாரே!
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. பயிற்சி ஆட்டம் என்றாலும் இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த வருட சீசன் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

கடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு செல்லாமல் தோல்வி அடைந்தது, ஆசிய கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது என்று வரிசையாக இந்திய அணி தோல்வியை தழுவியதால் இந்த தொடரில் எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தற்போது உலகக் கோப்பை டி 20 தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றது.
ஆனால் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் 15 வீரர்களும் மாற்றி மாற்றி களமிறக்கப்படுவார்கள் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்து இருந்தார்.

பயிற்சி ஆட்டம் என்பதால் 11 வீரர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. அணியில் இருக்கும் ஒருவரை உட்கார வைத்துவிட்டு இன்னொருவரை கூட ஆட்டத்திற்கு இடையில் எடுக்க முடியும்.இதில் முதலில் ஆடிய இந்திய 186-7 ரன்கள் எடுத்துள்ளது. சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். கே. எல் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து தற்போது ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய அணி அதிரடியாக பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை எடுக்க இந்திய அணி வீரர்கள் கடுமையாக திணறினார்கள். 6வது ஓவரில்தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட்டை எடுத்தது.
ஆனால் இன்னொரு பக்கம் ஆரோன் பின்ச் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். 54 பந்துகள் பிடித்த அவர் 76 ரன்கள் எடுத்தார். அவர் நிதானமாக ஆடி வந்ததால் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கையில் இருந்தது. 15 ஓவர் வரை ஆட்டம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியா கையில்தான் இருந்தது. அடுத்த இவரில் புவனேஷ்வர் குமார் மேக்ஸ்வெல்லை விக்கெட் எடுத்தார். அதன்பின்தான் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா பக்கம் திரும்பியது.
ஆனால் அதன்பின்பும் டெத் ஓவர்களில் அர்ஷ்தீப், ஹர்ஷல் பட்டேல் அடுத்தடுத்து ரன்களை கொடுத்ததால் ஆசிய கோப்பை போலவே டெத் ஓவர்களில் ஆட்டம் கையைவிட்டு போனது.
கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவிற்கு வெறும் 11 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. இது போன்ற நேரங்களில் ஆஸ்திரேலியா எளிதாக ரன்களை எடுக்கும் என்பதால் இந்தியா கண்டிப்பாக தோற்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் சம்பந்தமே இன்றி ரோஹித் சர்மா திடீரென ஷமியை பவுலிங் செய்ய அழைத்தார். 19 ஓவர்களில் ஒரு ஓவர் கூட அவர் வீசவில்லை.
கடந்த ஒரு வருடமாக அவர் 1 டி 20 போட்டி கூட ஆடவில்லை. காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அதன்பின் வந்த வாய்ப்பிலும் கொரோனா காரணமாக ஆட முடியவில்லை. இடையில் ஒரு வருடம் முழுக்க தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில்தான் நேரடியாக 11 ரன்களை டிபன்ட் செய்ய அவர் கிரவுண்டிற்கு வந்தார்.கும்மின்ஸ், இங்கிலீஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
ஷமி, போட்ட முதல் பந்தில் 2 ரன்கள் அடுத்த பந்தில் 2 ரன்கள் சென்றது. 4 பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் விழுந்தன. இதில் ஷமி எடுத்த விக்கெட் 3. ஒன்று ரன் அவுட்.
கடைசி இரண்டு பந்துகளில் துல்லியமாக யார்க்கர் போட்டு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் 3 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய அணியில் இந்த டெத் பவுலிங்தான் இத்தனை நாட்கள் மிஸ் ஆனது.
பும்ரா இல்லாத காரணத்தால் யார்க்கர் போட ஆள் இல்லாமல் இந்திய அணி திணறியது. ஆனால் ஷமி அதை ஒரே ஓவரில் தீர்த்து வைத்து இருக்கிறார். அவரின் வருகை காரணமாக இந்திய அணியின் பவுலிங்கே புதிய பலம் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications