Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த விஷயத்தால் அப்பா மிகவும் மனம் உடைந்து போனார்.. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் உருக்கம்

தனது தந்தை விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார் என்பது குறித்து அவரது மகன் சண்முகபாண்டியன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது தந்தை விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார் என்பது குறித்து அவரது மகன் சண்முகபாண்டியன் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது பழைய பேட்டி என்றாலும் வைரலாகி வருகிறது.

திரைத்துறையில் ரஜினி, கமலுக்கு இணையாக வளர்ந்த விஜயகாந்த் அரசியலில் தேமுதிக எனும் கட்சியை 2005 ஆம் ஆண்டு தொடங்கினார். இதையடுத்து 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.

இதையடுத்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் கட்சி சார்பில் 29 எம்எல்ஏக்கள் வென்றனர். தேமுதிகவை விட திமுக குறைந்த இடங்களில் வென்றதால் எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பை இழந்தது. இதனால் அந்த வாய்ப்பு விஜயகாந்துக்கு சென்றது.

எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர்

2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்த விஜயகாந்த் நடுவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சட்டசபையில் கடும் வாதம் செய்தார். அப்போது தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா என விஜயகாந்தை பார்த்து ஜெயலலிதா கேட்டார். பின்னர் அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் எதையோ சொல்ல அதற்கு நாக்கை துருத்திக் கொண்டு கோபப்பட்டார் விஜயகாந்த்.

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

இந்த 2011ஆம் ஆண்டுக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இருந்தார். அது பெரும் சறுக்கலை விஜயகாந்திற்கு தந்தது. இதையடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தேமுதிகவுக்கு இறங்குமுகமே இருந்தது. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு விஜயகாந்தின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் சிகிச்சை

அமெரிக்காவில் சிகிச்சை

இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அவரது கால் விரல் அறுவை சிகிச்சை மூலம் மியாட் மருத்துவமனையில் நீக்கப்பட்டது. இந்த நிலையில் அவ்வப்போது சமூக பொறுப்பு குறித்தும் சமூக பிரச்சினைகள் குறித்தும் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

தொண்டர்கள்

தொண்டர்கள்

இந்த நிலையில் தனது தொண்டர்களை பார்க்க வேண்டும் என சுதந்திர தினம், பிறந்த நாள், புத்தாண்டு 2023 ஆகிய நாட்களில் சந்தித்து குழந்தையை போல் மகிழ்ந்தார். அவர் எப்போது பேசுவார், எப்போது வெளியே வருவார் என லட்சோப லட்சம் தொண்டர்களும் மக்களும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். மிகவும் இளகிய மனம் கொண்ட விஜயகாந்த் ஏமாற்றத்தையும் துரோகத்தையும் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு அவரது மனம் பலமாக இல்லை.

பழிவாங்குவதா

பழிவாங்குவதா

அதற்காக அவர்களை பழிவாங்குவதோ அவர்கள் மீது சேற்றை வாரி இரைப்பதையோ செய்ய மாட்டார். மாறாக எங்கிருந்தாலும் வாழ்க என்பார். இது போல் ஒரு முறை விஜயகாந்த் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டதாக அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு மகன் அளித்த பேட்டி தற்போது ரீல்ஸ், ஷார்ட்ஸ் மூலம் வைரலாகி வருகிறது.

 சண்முகபாண்டியன் பேட்டி

சண்முகபாண்டியன் பேட்டி

சண்முகபாண்டியன் கூறுகையில், எங்கள் அப்பாவை எல்லாரும் குடிக்காரர் என விமர்சித்தார்கள். நான் கேட்கிறேன், இந்த காலத்தில் யார்தான் குடிப்பதில்லை? நான் 5 ஆம் வகுப்பு அல்லது 6 ஆம் வகுப்பு படிக்கும் போதே அப்பா குடிப்பதை நிறுத்திவிட்டார். அப்பா யாருக்கெல்லாம் நல்லது செய்ய வேண்டும், உதவி செய்ய வேண்டும் என நினைத்தாரோ அவர்கள் எல்லாம் அப்பாவை மேலும் மேலும் மன வேதனைக்குள்ளாக்கினர்.

மனவேதனை

மனவேதனை

அப்பா ஒரு முறை மன வேதனை அடைந்தார். எப்போதும் மன வேதனை அடைந்தாலும் எங்களிடம் சொல்லாமல் மென்று விழுங்குவார். ஆனாலும் நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். தேமுதிக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், அப்பாவுடன் கூட இருந்தவர்கள் எல்லாம் அவரை விட்டுவிட்டு சென்றவுடன் அப்பா மனம் உடைந்து போனார். அவர்கள் எல்லாம் சிறிய வயது முதல் கூடவே இருந்தவர்கள். அப்பாவுடன் வளர்ந்தவர்கள். அவர்கள் போனது அவரது மனம் வருத்தமடையச் செய்தது. இவ்வாறு சண்முகபாண்டியன் தெரிவித்தார்.

முதல்வருக்கும் விஜயகாந்த்

முதல்வருக்கும் விஜயகாந்த்


கடந்த 2012 ஆம் ஆண்டு சட்டசபையில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் ஏற்பட்ட மோதலால் கூட்டணி முடிவுக்கு வந்தது. அப்போது தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமசந்திரன், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து தொகுதி பிரச்சினைக்காக ஜெயலலிதாவை சந்திக்கிறேன் என கூறி 8 எம்எல்ஏக்கள் தேமுதிகவிலிருந்து விலகி அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டனர். இவர்கள் பெரும்பாலானோர் விஜயகாந்தின் நண்பர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+